ETV Bharat / entertainment

'வாய்தா' படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கும் ’வாய்தா’ திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

'வாய்தா' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : May 27, 2022, 5:10 PM IST

பல தடங்கல்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'வாய்தா' என்ற திரைப்படத்தில் நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்று உள்ளதாகவும்; அவற்றை நீக்க வலியுறுத்தியும் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சிலர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மகிவர்மன் என்ற புதிய இயக்குநர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நாசர், மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையிலும், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை மனம் புண்படுத்தும் வகையிலும் பணக்காரர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்தில் நீதி கிடைக்கப்பெறும் என்பது போலவும், ஏழைகளுக்கு உரிய நீதி கிடைக்காது என்னும் வகையிலும் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

எனவே, இப்படத்தில் நீதிமன்ற மாண்பைக் குறைக்கும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், படக்குழு அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தணிக்கை சங்கத்தினர் உடன் கலந்து பேசி, இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'நடிகர் அவதாரம் எடுத்த பாஜக அண்ணாமலை..!' : ரூ.1 மட்டுமே சம்பளம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.