ETV Bharat / entertainment

தசரா படக்குழுவைச் சேர்ந்த 130 பேருக்கு தங்க நாணயங்களை பரிசளித்த கீர்த்தி சுரேஷ்! - kollywood news

தசரா படக்குழுவைச் சேர்ந்த 130 பேருக்கு, தலா 10 கிராம் தங்க நாணயங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் பரிசாக அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 21, 2023, 7:41 PM IST

தமிழ், தெலுங்கு சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், கீர்த்தி சுரேஷ். முன்னாள்‌ நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் சிறு வயது முதலே மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் விக்ரம் பிரபு ஜோடியாக 'இது என்ன மாயம்’ என்ற‌ படத்தின்‌ மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ் கடந்து தெலுங்கு சினிமாவில் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அது மட்டுமின்றி, இந்தப் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாத இறுதியில் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் சமுத்திரகனி, ஷைன்டாம் சாக்கோ, உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தசரா படக்குழுவைச் சேர்ந்த 130 பேருக்கு, தலா 10 கிராம் தங்க நாணயங்களை பரிசாக வழங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் இருக்கும். ஒரு படத்தின் நடிகை இவ்வளவு செலவு செய்து பரிசுகள் கொடுப்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தசரா படப்பிடிப்பு முடிந்ததும் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், தசரா படத்திற்காக உழைத்த அனைவருக்கும் மறக்க முடியாத பரிசு வழங்க முடிவு செய்து, தங்க நாணயங்கள் பரிசாக கொடுத்துள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள தசரா படத்தில் கீர்த்தி சுரேஷ், வெண்ணிலா என்ற கேரக்டரில் நடித்து இருக்கிறார். தசரா திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தசரா படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், நடந்த தசரா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இப்படம் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படம் போல உள்ளதாக தசரா பட நாயகன் நானியிடம் கேட்டனர். அதற்கு பதில் கூறிய நானி, 'இந்த படத்தில் உடை மற்றும் மேக்கப் மட்டுமே அப்படி இருக்கும், படத்தை பார்த்த பிறகு இப்படி சொல்லமாட்டீர்கள்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதன் படத்தில் நயன்தாரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.