இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள கன்னட திரைப்படம் காந்தாரா(kanthara). இப்படம் தமிழிலும் அதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார்.
இப்படம் வெளியான போது படத்தில் இடம்பெற்ற ’வராக ரூபம்’ என்ற பாடல் சர்ச்சையில் சிக்கியது. அதாவது தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற மலையாள இசைக்குழு தயாரித்த ’நவரசம்’ என்ற ஆல்பத்தின் காப்பி என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அந்த இசைக் குழு இதுகுறித்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், காந்தாரா திரைப்படம் இன்று (நவ.24) அமேசான் பிரைம்(amazon prime) ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் இந்த ’வராக ரூபம்’ என்ற பாடல் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாய்க்குடம் பிரிட்ஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ”நமது நவரசம் ஆல்பத்தில் இருந்து திருடப்பட்ட காந்தாரா படப் பாடலை அமேசான் பிரைம் நீக்கியுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதற்காக
உடன் இருந்த அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளது.