ETV Bharat / entertainment

நடிகர் சித்தார்த்தை சூழ்ந்த கன்னட அமைப்பினர்.. நடந்தது என்ன? - cauvery issue protest

Actor Siddharth: பெங்களூரில் நடிகர் சித்தார்த் நடித்த சித்தா படத்தின் ப்ரோமோஷன் நடந்த இடத்திற்குச் சென்ற கர்நாடக அமைப்பினர், தமிழ் திரைப்படத்தின் ப்ரோமோஷனை இங்கு நடத்தக்கூடாது எனக் கூறி சித்தார்த்திடம் தகராறில் ஈடுபட்டனர்.

சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பு
சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 10:23 PM IST

Updated : Sep 29, 2023, 4:38 PM IST

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நீடித்து வருவதால், நாளை மறுநாள் முழு கடை அடைப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழ் நடிகர் சித்தார்த் தனது ‘சித்தா’ (சிக்கு என கன்னடத்திலும் வெளியாகிறது) படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்று (செப்.28) பெங்களூரு சென்றார். ஆனால், இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டபோது, கன்னட ஆதரவு அமைப்புகளின் தொண்டர்கள் அந்த இடத்திற்குச் சென்று இடையூறு செய்துள்ளனர்.

  • #WATCH | Bengaluru | Members of Karnataka Karnataka Rakshana Vedike Swabhimani Sene interrupted a press conference being held by actor Siddharth for his film 'Chikku' and demanded that he leave the venue. The members said that it was not an appropriate time for him to do this PC… pic.twitter.com/R2QXbxgbbR

    — ANI (@ANI) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழில் ‘சித்தா’ என்று அழைக்கப்படும் இந்தப் படம் கன்னடத்தில் ‘சிக்கு’ என்ற பெயரில் வெளியாகிறது. மல்லேஸ்வரத்தில் உள்ள திரையரங்கில் படத்தின் ரிலீஸ் குறித்த செய்தியாளர் சந்திப்பை சித்தார்த் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, கன்னட ஆதரவு அமைப்பு தலைவர்கள் நிங்கராஜு கவுடா, கரவே ஸ்வாபிமானி சேனா தலைவர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், காவிரி நதிநீர் பிரச்னைக்காக போராடி வரும் நிலையில், தமிழ் சினிமாவுக்கு செய்தியாளர் சந்திப்பு தேவையா என்று அந்த அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அந்த அமைப்பினர் ப்ரோமோஷனை முடித்துவிட்டு அங்கிருந்து செல்லுமாறு சித்தார்த்திடம் கூறினர். இதனையடுத்து, அந்த அமைப்பினரிடம் சித்தார்த் கன்னடத்தில் பேச முயன்றார், ஆனால் அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. மேலும், தமிழ் திரைப்பட விளம்பரத்தை அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதனையடுத்து நடிகர் சித்தார்த் செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறிச் சென்றார்.

இதையும் படிங்க: ‘மும்பை சென்சார் போர்டு ரூ.6.5 லட்சம் வாங்குனாங்க’.. நடிகர் விஷால் பரபரப்பு புகார்!

Last Updated : Sep 29, 2023, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.