ETV Bharat / entertainment

இரவில் ஹீரோவின் அறைக்கு செல்லவில்லை.. கங்கனா ரனாவத் ஓபன் டாக்.. அதிரும் பாலிவுட்.. - கங்கனா ரனாவத் ஹாட்

மற்ற பெண்களைப் போல இரவில் ஹீரோவின் அறைக்கு செல்லவில்லை என்பதாலும், திருமணங்களில் நடனமாட மறுத்ததாலும் பாலிவுட்டில் இருந்து என்னை ஓரங்கட்டியதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

கங்கனா ரனாவத் ஓபன் டாக்
கங்கனா ரனாவத் ஓபன் டாக்
author img

By

Published : Feb 27, 2023, 5:00 PM IST

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவை மாஃபியா கும்பல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். இவரது கருத்துக்கள் பெரும் சர்ச்சை கிளப்பி வருகிறது. அந்த வகையில், கங்கனா ரனாவத் இன்று (பிப்.27) தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதில், இந்த மோசமான திரைப்பட மாஃபியா என்னை திமிர் பிடித்தவள் என்று அழைக்கிறது. ஏனென்றால், நான் குத்து பாடல்களிலும், செல்வந்தர்களின் திருமணங்களிலும் மற்றவர்களை போல நடனமாடுவதில்லை. எந்த ஹீரோவின் அறைக்கும் நள்ளிரவில் செல்ல ஒப்புக்கொள்வதில்லை. அவ்வாறு செய்திருந்தால், அவர்கள் என்னை விரும்பியிருப்பார்கள். அவர்களின் வழிக்கு நான் வளைந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால், இதுபோன்று நடந்துகொள்வதால் மட்டுமே கிடைக்கும் புகழ் எனக்கு வேண்டவே வேண்டாம். நான் கடினமாக உழைத்து, விரும்பிய ஒரு படத்தை எடுக்க எல்லாவற்றையும் அடமானம் வைத்துள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கனா ‘எமர்ஜென்சி’ என்ற படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவனுக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.