ETV Bharat / entertainment

ரூ.750 கோடி வசூலை நெருங்கும் ஜவான்! பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தும் "பாலிவுட் பாட்ஷா"!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 2:31 PM IST

Jawan Collection Day 12: ஜவான் திரைப்படம் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் ஏற்கனவே 650 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ள நிலையில் தற்போது 750 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சஞ்சய் தத் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஜவான் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

படம் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஜவான் படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 75 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் 53.23 கோடியும், மூன்றாவது நாளில் 77.83 கோடியும் வசூல் செய்தது.

நான்காவது நாளில் 80 கோடி வசூல் செய்து ஒரே நாளில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. ஜவான் படம் வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தென் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வசூலை பெறவில்லை.

இந்நிலையில் ஜவான் திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 750 கோடி வசூலை நெருங்கி வருகிறது. ஜவான் திரைப்படம் நேற்று (ஞாயிறு) இந்திய அளவில் 36 கோடி வசூலை பெற்றது. ஜவான் படம் வெளியானது முதல் வசூலை வாரி குவித்து வரும் நிலையில், இதே நிலை தொடர்ந்தால் ஜவான் படம் 1000 கோடி வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

ஜவான் படம் இந்திய அளவில் இதுவரை 12 நாளில் 477.28 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் வசூல் மன்னன் என மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயிலர் வெற்றி விழா : ரஜினி, நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.