சென்னை: ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கிய படம், ’ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மோரிஸ் உட்பட பலர் நடித்தனர். கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் ஆயிரத்துக்கு நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.
இதையடுத்து ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை அடுத்து ராஜமௌலி பேட்டியில் ஒன்றில், மகாபாரத கதையை இயக்குவதுதான் தனது கனவு என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, இந்திய கதைகளை உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதை பெரிதாகவும், பிரம்மாண்டமாகவும் எடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். ’மகாபாரதம்’ எனது நீண்ட நாள் கனவுத் திட்டம். கடல் போன்ற அந்தத் திட்டத்துக்குள் நான் அடியெடுத்து வைப்பதற்கு அதிக காலமாகும். அதற்கு முன், மூன்று அல்லது நான்கு படங்களை இயக்கி முடிக்க விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெளியானது ”காட்ஃபாதர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ