ETV Bharat / entertainment

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் வாய்ப்பை பறித்தாரா அதிதி? - madhura veeran song

கார்த்தியின் ’விருமன்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ராஜலட்சுமி பாடியிருந்த ’மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போது அதிதி ஷங்கரின் குரலில் வெளியாகியுள்ளது ரசிகர்கள் இடையே பேசு பொருளாகியுள்ளது.

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் வாய்ப்பை பரித்தாரா அதிதி?

author img

By

Published : Aug 10, 2022, 4:28 PM IST

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடகராக அறியப்பட்ட தம்பதியினர் செந்தில், ராஜலட்சுமி. அதனைத்தொடர்ந்து இந்த ஜோடி நிறைய திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளனர். இந்நிலையில் கார்த்தியின் ’விருமன்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ’மதுரை வீரன்’ என்ற பாடலை முதலில் ராஜலட்சுமி தான் பாடியிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள பாடலில், இப்படத்தின் கதாநாயகி அதிதி ஷங்கரின் குரலில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இதனால் ராஜலட்சுமி அதிர்ச்சி அடைந்து தனது வாய்ப்பு பறிபோய் விட்டதாக புலம்பி வருகிறாராம். இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்களும் 'யுவன் ஏன் பாடகரை மாற்றினார்?' எனக்கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், எல்லா இசையமைப்பாளர்களும் பாட்டின் ரெக்கார்டிங்கின்போது நிறைய பாடகர்களைப் பாடவைத்துப்பார்ப்பது வழக்கம். இது இயல்பாக நடக்கும் விஷயம். பாடுகிற எல்லோருடைய குரலும் வெளியில் வர வேண்டும் என்ற அவசியமில்லை, எனவும் ஒரு சிலர் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: முதல் படத்திலேயே அதிதிக்கு இவ்வளவு சம்பளமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.