லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இதனால் கமல்ஹாசன் தனது இந்தியன் 2 படத்தையும் உடனடியாக தொடங்க ஆயத்தமாகி வருகிறார்.
பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரண் படத்தில் பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த நெடுமுடி வேணு மற்றும் விவேக் ஆகிய இருவரும் காலமாகி விட்டனர். இதனால் இந்த இருவரது காட்சியை வேறு நடிகர்களை வைத்து மீண்டும் படமாக்குவதா அல்லது இந்த இருவரின் கேரக்டர்களை நீக்குவதா என்ற பெரும் சவால் படக்குழுவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
![மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-indian2-kamal-script-7205221_06072022123325_0607f_1657091005_434.jpg)
அதேபோல் காஜல் அகர்வால் இந்த படத்தில் நடித்து வந்த நிலையில், அவருக்கு திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டதால் மீண்டும் இப்படத்தில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனாலும் மாற்று திட்டத்துடன் படப்பிடிப்பை தொடங்க ஷங்கர் தயாராக உள்ளதால் எந்தவித குழப்பமும் ஏற்படாது என்கின்றனர். ஏற்கனவே சுமார் 60% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பை இந்த வருடத்தில் முடித்து அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கமல்ஹாசன், சித்தார்த், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ரகுல் ப்ரித் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இதையும் படிங்க: ‘ராக்கெட்ரி’ படம் பார்க்காமலேயே பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்!