சென்னை: சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் படம் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து மீண்டும் பிச்சைக்காரன் 2 என்ற படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார். மூளை மாற்று சிகிச்சை பற்றி பேசும் இப்படம் வருகிற மே 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி கூறும்போது, ''நான் எதிர்பார்க்கவே இல்லை, படம் இயக்குவேன் என்று. இது ஒரு விபத்து தான். முதலில் சசி தான் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் வேறு படம் இயக்கி வந்ததால் முடியவில்லை. பின்னர் மற்றொரு இயக்குநரிடம் பேசினோம். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
பின்னர், வேறு வழியின்றி நானே இயக்கிவிட்டேன். இப்படம் நன்றாக வந்துள்ளதற்கு படக்குழுவினர் தான் காரணம். நல்ல படமாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும். இது ஐந்து மொழிகளில் வெளியாகிறது. நான்கு மொழிகளில் ஒரே நேரத்திலும் இந்தியில் ஒரு வாரம் கழித்தும் வெளியாக உள்ளது. சரியாக 2.30 மணிநேரம் ஓடும். எல்லோரும் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது விபத்தில் சிக்குவார்கள். ஆனால், நான் காதல் காட்சியில் நடிக்கும்போது கீழே விழுந்தேன்.
![I became a director without any other means Pichaikaran two debut director Vijay Antony](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-vijay-antony-script-7205221_04052023154020_0405f_1683195020_748.jpg)