ETV Bharat / entertainment

Director Rajesh: ஓடிடியில் களமிறங்கிய இயக்குநர் ராஜேஷ்- Disney plus Hotstar வெளியிட்ட அப்டேட்.. - ஹன்ஷிகா நடிக்கும் முதல் வெப் சிரீஸ்

MY3 web series: பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற நகைச்சுவை படங்களின் இயக்குநர் M.ராஜேஷின் இயக்கும் தொடர் விரைவில் வெளியாகும் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

MY3 web series
MY3 web series
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 4:30 PM IST

சென்னை: பிரபல ஒடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney plus Hotstar), "மை3" (MY3) என்ற இணைய தொடர் (Web series) பர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடரை, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற காமெடி பிளாக்பஸ்டர் படங்களின் இயக்குநர் M.ராஜேஷ் இயக்கியுள்ளார். முன்னதாக விக்டிம் (Victim) என்ற இணைய தொடரில் ஒரு தொடரை மட்டும் இயக்கிய இவர், தற்போது முதல் முறையாக முழு இணைய தொடர் ஒன்றை இயக்கியுள்ளார்.

அத்தொடருக்கு "மை3" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தொடர் ரொமான்டிக் காமெடி ஜானரில், ஒரு ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இணைய தொடரில் ஒளிப்பதிவாளராக கார்த்திக் முத்துக்குமாரும், இசையமைப்பாளராக கணேசன் என்பவரும் பணிபுரிந்துள்ளனர். அஷிஷ் படத் தொகுப்பு பணிகளை செய்துள்ளார்.

இந்த "மை3" தொடரை Trendloud நிறுவனம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. "மை3" தொடரின் டைட்டில் அறிவிப்பை ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ் இணைந்து பிக்பாஸ் ஹவுஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தின் நகைச்சுவைகள் இன்றளவிலும் அனைவரும் கொண்டாடக்கூடியவை.

அந்த படத்திற்க்கு பிறகு நடிகை ஹன்ஷிகா மோத்வானி இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் இணைந்து நடித்துள்ளது ரசிகர் மத்தியில் இத்தொடர் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. ஒரு புதுமையான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் விரைவில் டிஸ்னி+ ஹாஸ்டாரில் (Disney plus Hotstar) ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் இது ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் முதல் இணைய தொடர் (Web series) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த இணைய தொடரின் (Web series) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (First Look) வெளியாகி உள்ளது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிரபல பாடகர் முகன் ராவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு "வேலன்‌" என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார்.‌ அதனை தொடர்ந்து தற்போது தமிழ்ப் படங்களில் பலவற்றில் தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக இந்த இணைய தொடர் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த தொடர் குறித்த புகைப்படத்தை நடிகை ஹன்ஷிகா மோத்வானி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் தங்களில் மகிழ்ச்சியை கமெண்டுகள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இது கொரிய மொழியில் வெளியான பிரபல I am not a robot என்ற வெப் சிரீஸ்யை தழுவி உருவாக்கப்பட்டது என்றும் பேசப் படுகிறது.

இதையும் படிங்க: 384th birth anniversary of chennai: சென்னையும் - சினிமாவும் ஒரு சிறப்பு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.