ETV Bharat / entertainment

நான் நன்றாக நடிக்கிறேன் என்றால் இயக்குநர் பாலாதான் காரணம் - ஜி.வி பிரகாஷ் குமார் பெருமிதம்! - சினிமா செய்திகள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'அடியே' படம் இந்த வாரம் வெளியாகும் நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் இயக்குநர் பாலாவுக்கு நன்றி தெரிவித்தார்.

நான் நன்றாக நடிக்கிறேன் என்றால் இயக்குநர் பாலாதான் காரணம் - நடிகர் ஜி.வி பிரகாஷ் குமார்!

author img

By

Published : Aug 20, 2023, 10:20 PM IST

நான் நன்றாக நடிக்கிறேன் என்றால் இயக்குநர் பாலாதான் காரணம் - நடிகர் ஜி.வி பிரகாஷ் குமார்!

சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள 'அடியே' படத்தில் நடிகை கவுரி கிஷன் ஜோடியாக நடித்திருக்கிறார். வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். ‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரையில் வெளியாகிறது.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 20) படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகை கௌரி கிஷன், இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, “இப்படத்தில் எனக்கு எல்லா இடத்திலும் சுலபமாக இருந்தது. ஜிவி எப்போதுமே பாஸிடிவ் மனிதர். பாடல்கள் நன்றாக வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா பாடல் பாடியுள்ளார். அவருக்கு நன்றி” என்றார்.

நடிகை கௌரி கிஷன் பேசும்போது, “ 'அடியே' எனக்கு மிக முக்கியமான படம். வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இந்தியன் சினிமாவில் இது மிகவும் வித்தியாசமான படம். ஒத்துழைப்பு அளித்து அனைவருக்கும் நன்றி. என் வாழ்வில் அதுவும் எதிர்பாராமல் நடந்துள்ளது. அடியே பட வாய்ப்பும் அப்படித்தான். ஜிவியின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

எனக்கான மைல்ஸ்டோனாக இது இருக்கும் என்று பார்க்கிறேன். வெங்கட் பிரபு நடித்துள்ளார். ஆனால் எனக்கு அவருடனான காட்சிகள் இல்லை. அவர் அருமையாக நடித்துள்ளார். இருவேறு விதமான கதாபாத்திரங்கள் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் அதற்கு நிறைய பயிற்சி எடுக்க வேண்டி இருந்தது. குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது” என்று பேசினார்.

இதையும் படிங்க: 15 மில்லியன் பார்வைகளை கடந்த ‘வேற மாறி ஆபிஸ்’ தொடர் - ஆஹா ஓடிடியில் மக்கள் வரவேற்பு!

ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும்போது, “ இது ரெகுலர் படம் கிடையாது. புதுமையான படம் பார்க்க விரும்புபவர்களுக்கான படம் இது. இயக்குனர் வித்தியாசமான கதையை சொன்னார். கூல் சுரேஷ் ஊமையாக இருப்பார். பயில்வான் இரண்டு ஆஸ்கர் வாங்கியுள்ளார் என்று சொல்வார். நன்றாக இருந்தது அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ட்ரைலரில் உள்ளது நிச்சயம் படத்தில் இருக்கும். இது போன்ற புதிய முயற்சிகள் மேற்கொள்ள இப்படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “ இப்போது நான் நன்றாக நடிக்கிறேன் என்றால் அதற்கு இயக்குனர் பாலாதான் காரணம். அதற்கு முன் காமெடி‌ படங்களில் நடித்து வந்தேன். பாலாவின் நாச்சியார் படத்துக்கு பிறகு சர்வம் தாளமயம், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற நல்ல இயக்குனர்கள் கிடைத்தனர்” என்றார். இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் பேசும்போது, “ ஜி. வி பிரகாஷ் எப்போதும் ஜாலியான நபர். அது மட்டுமின்றி எதையும் நேரடியாக பேசும் பழக்கம் உடையவர். அவருடன் நட்பு வைத்துக் கொள்வதில் ஆசை இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: kavin monika wedding: காதலியை கரம்பிடித்த நடிகர் கவின் - குவியும் வாழ்த்துகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.