சென்னை: இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் புதிய திரைப்படம், கேம் சேஞ்சர் (game changer). இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராம் சரண் நடிக்கும் இந்த படத்தை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
-
#GameChanger pic.twitter.com/1pWlhYFT1I
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#GameChanger pic.twitter.com/1pWlhYFT1I
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 23, 2023#GameChanger pic.twitter.com/1pWlhYFT1I
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 23, 2023
இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் ஜெயராம், அஞ்சலி, சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ராம் சரண் தனது "x" தளத்தில் அறிவித்திருந்தார்.
இந்த படம் RC15 மற்றும் SVC50 படமாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது என படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியானது. பின்னர் கரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை என படக்குழு தரப்பில் கூறப்பட்டது.
மேலும், இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் 27ஆம் தேதி ராம் சரண் பிறந்தநாளன்று டைட்டிலுடன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த போஸ்டரில் ராம் சரண் தனது மிரட்டலான லுக்கில், பைக்கில் அமர்ந்து இருப்பது போல போஸ்டர் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவ்வப்போது படத்தின் அப்பேட் வெளி வந்த நிலையில், இன்று (அக்.24) படத்தின் முதல் சிங்கிள் “ஜா ரா கண்டி” பாடல் தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு தரப்பில் "x" தளத்தில் போஸ்டர் உடன் வெளியிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:“தளபதி 68” படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியீடு