இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் தமிழ்ப்பாடலான ’டியா,டியா டோலே’ பாடலுக்கு மூன்று பெண்கள் நடனமாடினர். பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த உஷா என்பவர் அதனைப் பதிவிட்டார். இந்த பெண்களின் வீடியோவை இசையமைப்பாளர் யுவன், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இப்படி நம் தமிழ்ப்பாடலை காமன்வெல்த் போட்டியில் ஒலிக்கச் செய்த இந்த பெண்கள் யார்?,
-
Kuthu is a way for us to set our emotions free. It is the rawest form of ourselves.@mithuxjanu and me are really happy that we could represent our culture at such a big competition as the #CommonwealthGames 22. Felt UNREAL to perform our Tamil dance style over there 🥹 pic.twitter.com/rBHuI5px5j
— Usha Jey (@Usha_Jey) August 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kuthu is a way for us to set our emotions free. It is the rawest form of ourselves.@mithuxjanu and me are really happy that we could represent our culture at such a big competition as the #CommonwealthGames 22. Felt UNREAL to perform our Tamil dance style over there 🥹 pic.twitter.com/rBHuI5px5j
— Usha Jey (@Usha_Jey) August 9, 2022Kuthu is a way for us to set our emotions free. It is the rawest form of ourselves.@mithuxjanu and me are really happy that we could represent our culture at such a big competition as the #CommonwealthGames 22. Felt UNREAL to perform our Tamil dance style over there 🥹 pic.twitter.com/rBHuI5px5j
— Usha Jey (@Usha_Jey) August 9, 2022
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரான்ஸில் வாழும் 'உஷா ஜெ', என்பவர் தான் இந்த வீடியோவை ”காமன்வெல்த் விளையாட்டுப்போன்ற ஒரு பெரிய போட்டியில் நமது கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி”, எனும் தலைப்புடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
அவர் தான் அந்தப் பாடலுக்கு நடன இயக்குநரும் ஆவார். மேலும் அவருடன் அந்த வீடியோவில் மிதுஜா மற்றும் ஜானுஷா ஆகியோர் ஆடியுள்ளனர். தொழில்முறை நடனக்கலைஞரான உஷா பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் தொடங்கிய ’ஹைப்ரிட் பரதநாட்டியம்’ வீடியோ மூலம் பெரிதளவில் பிரபலம் அடைந்தார்.
’ஹைப்ரிட் பரதநாட்டியம்’ என்ற பெயரில் வெஸ்டர்ன், ஹிப் ஹாப் பாடல்களுக்கு ஏற்ற வகையில் பரதநாட்டியம் ஆடி உஷா பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. உஷா மற்றும் அவரது நண்பர்கள் தொடர்ந்து ஒரு தொடர்போல பதிவிட்டு வரும் இந்த ’ஹைப்ரிட் பரதநாட்டியம்’ வீடியோக்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு எனக் கூறலாம்.
-
What the f- though ?
— Usha Jey (@Usha_Jey) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Where the love go ? 🧨@LilTunechi @THEREALSWIZZZ pic.twitter.com/H7kTfQXMO4
">What the f- though ?
— Usha Jey (@Usha_Jey) May 22, 2022
Where the love go ? 🧨@LilTunechi @THEREALSWIZZZ pic.twitter.com/H7kTfQXMO4What the f- though ?
— Usha Jey (@Usha_Jey) May 22, 2022
Where the love go ? 🧨@LilTunechi @THEREALSWIZZZ pic.twitter.com/H7kTfQXMO4
இந்நிலையில் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் அவர்கள் ஆடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் வாய்ப்பை பறித்தாரா அதிதி?