விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கிய ’வாரிசு’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்துடன் வெளியான இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய், மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனராஜுடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறார். தற்போது வரை பெயரிடப்படாத இந்த திரைப்படம் ‘தளபதி 67’ என அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ பெரும் வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி இந்த LCU எனும் லோகேஷின் புதிய சினிமாட்டிக் யூனிவர்ஸும் இதன் மூலம் உருவானது எனவே கூறலாம். இதனால் ரசிகர்கள் அனைவரும் தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 67 திரைப்படமும் இதன் கீழ் வருமா எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையிலும், ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தும் படியான ஒரு புதிய அப்டேட்டையும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற படத்தின் பிரமோஷன் விழாவில் கலந்துகொண்ட ஃபகத் ஃபாசில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
LCU 😍🔥🎉
— Dreamax Cinemas (@DasanDeepak) January 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
"#Thalapathy67 belongs to LCU & I may do a role in T67" - says #FahadhFaasil in #Thankam press meet 🔥👏 pic.twitter.com/7kP30vrvy3
">LCU 😍🔥🎉
— Dreamax Cinemas (@DasanDeepak) January 23, 2023
"#Thalapathy67 belongs to LCU & I may do a role in T67" - says #FahadhFaasil in #Thankam press meet 🔥👏 pic.twitter.com/7kP30vrvy3LCU 😍🔥🎉
— Dreamax Cinemas (@DasanDeepak) January 23, 2023
"#Thalapathy67 belongs to LCU & I may do a role in T67" - says #FahadhFaasil in #Thankam press meet 🔥👏 pic.twitter.com/7kP30vrvy3
அந்த வீடியோவில், நடிகர் ஃபகத் ஃபாசிலிடம் செய்தியாளர் ஒருவர் ”நீங்கள் தளபதி 67 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புள்ளதா” என கேட்டார். அதற்கு பதிலளித்த ஃபகத் ஃபாசில், “தளபதி 67 திரைப்படம் LCU வில் வருவதால் நான் அதில் நடிப்பதற்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் உற்சாகத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.
முன்னதாகவே இந்த தளபதி 67 திரைப்படத்தில் இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் தாங்கள் நடித்து வருவதை உறுதி செய்துள்ளனர். மேலும் இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிருத்விராஜ் மற்றும் பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத் தளங்களில் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இப்படி விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் எனத் தகவல் வெளியான நாள் முதல், தற்போது வரை இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு!