ETV Bharat / entertainment

காஷ்மீரில் நிலநடுக்கம் - லியோ படக்குழுக்கு என்ன ஆச்சு..? - விஜய்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்நிலையில் காஷ்மீரில் உள்ள லியோ படக்குழுவினர் நிலநடுக்கத்தால் பாதிப்பின்றி பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

earthquake in Kashmir Leo team said they are safe
காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் லியோ படக்குழுவினர் தாங்கள் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்
author img

By

Published : Mar 22, 2023, 10:58 AM IST

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இயக்குனராக உருவாகியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரது அடுத்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் கௌதம் மேனன், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் அங்கு படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அதில் விஜய் பேசிய பிளடி ஸ்வீட் என்ற வசனம் பிரபலமானது. விக்ரம் படத்தை போலவே வெளியிடப்பட்ட இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இணையுமா என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அப்படி இணைந்தால் இப்படத்தில் கமல், கார்த்தி, சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை ஒரே படத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஜய்க்கு என்ன ஆச்சு என்று பதறிப் போயினர்.

இந்த நிலையில் இயக்குனரும், லியோ படத்திற்கு வசனம் எழுதியவருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பிளடி நில நடுக்கம் (BLOOODY Earthquake) என்று பதிவிட்டு உள்ளார். இதன் மூலம் லியோ படக்குழுவினர் தங்கியுள்ள ஹோட்டல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதியாகி உள்ளது. மேலும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா (We are safe nanba) என்று பதிவிட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்று காலையிலேயே சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீரில் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதன் படத்தில் நயன்தாரா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.