நடிகை துஷாரா விஜயன் இயக்குநர் பா.இரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி திரை விமர்சகர்களிடமும், மக்களிடமும் பாராட்டுகளைப் பெற்றார். இதற்கடுத்தபடியாக பல படங்களில் நடித்து வருகிறார், துஷாரா. இந்நிலையில், துபாயில் தன் விடுமுறை நாள்களைக் கொண்டாடும் வகையில், ’ஸ்கை டைவிங்’ செய்துள்ளார், துஷாரா.
இது குறித்து அவர் கூறுகையில், “ 'Go with the flow' எனும் பொன்மொழியே என்னை எப்போதும் உற்சாகப்படுத்துவதாகும். அதன் அழகையும் நான் தற்போது அனுபவித்துள்ளேன். விண்ணிலிருந்து குதித்தது சொர்க்கத்தைப் பார்த்த அனுபவமாக இருந்தது. அது என் மனது, உடல், மற்றும் ஆத்மாவிற்கும் புத்துணர்ச்சியாக இருந்தது. இந்த சாகசத்தில் என்னுடன் இருந்த அன்பான உதவியாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன்!