ETV Bharat / entertainment

"எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்"..இயக்குநர் பாலாவுக்கு இன்று பிறந்தநாள்... - surya bala

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன். நான் வாழ யார் பாடுவார் என கேட்கும் இயக்குநர் பாலாவுக்கு இன்று 56 ஆவது பிறந்தநாள். அவர் குறித்த சிறப்பு தொகுப்பினை காணலாம்.

இருண்டு போன மனிதர்களின் வாழ்வை வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர் பாலாவுக்கு இன்று பிறந்தநாள்...

author img

By

Published : Jul 11, 2022, 5:07 PM IST

Updated : Jul 11, 2022, 5:30 PM IST

தொடர்ந்து ஒரெ விதமாக கமர்ஷியல் படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், இப்படியும் படம் எடுக்கலாம் என நாம் பெரிதும் காணாத வாழ்வியலை நமக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பாலா. தமிழ் ரசிகர்களின் ரசனையை குறுகிய பார்வையினை மென்மேலும் அகலப்படுத்தியவர். சினிமா ரசிகர்களை மீண்டும் யதார்த்த உலகுக்குள் அழைத்துச் சென்ற இயக்குநர் பாலாவுக்கு இன்று (ஜூலை 11) 56 ஆவது பிறந்தநாள்.

காலம் காலமாக, `யாருடைய படத்தில் நடிக்க ஆசை?' என்ற கேள்விக்கு நடிகர், நடிகைகள் பெயரை பரிந்துரை செய்துகொண்டிருந்த நிலையை மாற்றி, `இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க வேண்டும்' என்ற வார்த்தைகளை உதிர்க்க வைத்தவர் பாலா.

ஓங்கி ஒலித்த குரல்: `சேது', `நந்தா', `பிதாமகன்', `நான் கடவுள்', `அவன் இவன்', `பரதேசி', `தாரை தப்பட்டை' என தொடர்ந்து தன் படங்களில் மனித உணர்வுகளைக் காட்சிப்படுத்தி சக மனிதர்களின் வலியை பார்வையாளர்களுக்கும் கடத்திய உன்னத கலைஞன் பாலா. எத்தனை எத்தனையோ இயக்குநர்கள் இங்கு மக்களால் ரசிக்கும்படி படம் எடுத்துள்ளனர், ரசிகர்களால் போற்றப்பட்டும் உள்ளனர்.

சேது படப்பிடிப்பில் பாலா
சேது படப்பிடிப்பில் பாலா

ஆனால் வெகுசில இயக்குநர்கள் மட்டுமே தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். அதுவும் வேற்று மொழிகளில் படங்களை இயக்காமலே, அத்தகு அங்கீகாரத்தை தன் வெகுசில படங்கள் மூலமாகவே பெற்றிருப்பவர் இயக்குநர் பாலா. அனைத்து மக்களாலும் பெரிதும் பாரட்டப்பட்ட ’கேங்க்ஸ் ஆஃப் வாஸிபூர்’ படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யாப், படத்தின் ஆரம்பத்தில் பாலா, சசிகுமார் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

போராட்டத்திற்கு பின் கிடைத்த முதல் வெற்றி: ’சேது’ படத்தின் வெற்றி குறித்து அனைவருக்கும் தெரியும், ஆனால் அதற்கு பாலா இழந்தது ஏராளம். படத்தின் கிளைமாக்ஸ் மாற்ற வேண்டும் என்றனர், ஆனால் முடியாது என்று பாலா மறுத்துவிட்டார். பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு படம் வெளியாகி முதல் வாரம் கூட்டமே இல்லை.

ஆனால் பாலா துவண்டு போகவில்லை. மக்களின் வாய் மொழி விமர்சனத்தால் அடுத்தடுத்த வாரங்களில் பிக்கப் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்த படம் ”நந்தா” இலங்கை அகதிகள் பற்றிய‌ படம்.

நந்தா படப்பிடிப்பில் பாலா
நந்தா படப்பிடிப்பில் பாலா

சூர்யாவை நடிப்பில் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்ற படம் ராஜ்கிரண் ரோல் முதலில் சொல்லப்பட்டது சிவாஜிதான், ஆனால் சிவாஜியின் உடல்நிலை காரணமாக நடக்காமல் போனது. சிவாஜியிடம் கதை சொன்னது தன் வாழ்நாளில் ஒரு‌ முக்கியமான நிகழ்ச்சி என பாலா குறிப்பிடுவார்.

வாழ்க்கை மாறிய தருணம்: தொடர்ந்து அவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெரிதளவு இல்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இவரின், ”பரதேசி” திரைப்படம் மூலம் இன்றளவிலும் தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்த பலரும் மீட்கப்பட்டனர். இவரது சமீபத்திய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், ஒரு இயக்குநராக பாலாவின் முத்திரையிடாத படங்களே இல்லை.

கதை, கதைக்களம், திரைக்கதை, படமாக்கம், கதாபாத்திர வடிவமைப்பு, நடிகர்கள் தேர்வு, அவர்களிடமிருந்து ஆக சிறந்த நடிப்பை பெறுவது என எல்லாவற்றையும் தனது ஆளுமையை செலுத்தியிருப்பார். இவரது ”இவன்தான் பாலா” புத்தகத்தில் முதல்வரியே இப்படி இருக்கும் "பிறந்தபோதே இறந்து போயிருக்க வேண்டிய சவலப்பிள்ளை நான்".ஏனென்றால், சிறுவயதில் அவர் செய்யாத தவறுகள் இல்லை.

பரதேசி படப்பிடிப்பில் பாலா
பரதேசி படப்பிடிப்பில் பாலா

பாடலாசிரியர் அறிவுமதி மூலம் பாலுமகேந்திராவிடம் சேர்ந்த பிறகு பாலாவின்‌ வாழ்க்கை மாறியது. மகிழ்ச்சியான தருணங்களில் பாலா, `எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன். நான் வாழ யார் பாடுவார்...' என்ற பாடலைக் கேட்பாராம். அவருடைய பிறந்த நாளான இன்று அவர் வாழ பாலாவின் குருநாதரின் பாடலை நாம் பாடலாம். ஆம் .....நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துக்கள்...

இதையும் படிங்க: நித்தியானந்தாவை திருமணம் செய்ய ஆசை - பிரியா ஆனந்த் பளிச்

Last Updated : Jul 11, 2022, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.