சென்னை: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்த தயாரிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன. 18) பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இந்த படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். சண்டை பயிற்சியாளராக யானிக் பென் பணிபுரிய உள்ளார். ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரிய உள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநரான சேகர் கம்முலா, ஃபிடா, லவ் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இது தனுஷ் நடிக்கும் 51வது திரைப்படமாகும். மேலும் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க இயக்குநர் அமீர் கோரிக்கை!
-
A blockbuster voyage that's bound to resonate with the nation! 😎#DNS kicks off with a pooja ceremony and the shoot begins with a key schedule 🎥
— Aditya Music (@adityamusic) January 18, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
More details on the way ⏳@dhanushkraja @iamnagarjuna @iamRashmika @sekharkammula @AsianSuniel @puskurrammohan @SVCLLP… pic.twitter.com/JjKSkG89aO
">A blockbuster voyage that's bound to resonate with the nation! 😎#DNS kicks off with a pooja ceremony and the shoot begins with a key schedule 🎥
— Aditya Music (@adityamusic) January 18, 2024
More details on the way ⏳@dhanushkraja @iamnagarjuna @iamRashmika @sekharkammula @AsianSuniel @puskurrammohan @SVCLLP… pic.twitter.com/JjKSkG89aOA blockbuster voyage that's bound to resonate with the nation! 😎#DNS kicks off with a pooja ceremony and the shoot begins with a key schedule 🎥
— Aditya Music (@adityamusic) January 18, 2024
More details on the way ⏳@dhanushkraja @iamnagarjuna @iamRashmika @sekharkammula @AsianSuniel @puskurrammohan @SVCLLP… pic.twitter.com/JjKSkG89aO
கடைசியாக தனுஷ் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் நடித்து வெளியான ‘வாத்தி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘கேப்டன் மில்லர்’ ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கேப்டன் மில்லர் வரும் ஜனவரி 25ஆம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாப்பிடும் முன் வழிபட்ட விஷால்… யோகிபாபு கொடுத்த ரியாக்சன் வைரல்!