அரண்மனை-3 படத்திற்குப்பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ”காபி வித் காதல்”. குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும் முக்கியக் கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் வரும் வெள்ளியன்று (ஜூலை 1) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்கரில் சூர்யாவிற்கு என்ன வேலை?