ETV Bharat / entertainment

மாமன்னன் இசை வெளியீட்டு விழா: தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு? - சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கு

சென்னையில் நாளை நடைபெறவுள்ள மாமன்னன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 31, 2023, 6:21 PM IST

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசை புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி அரங்கேற இருக்கிறது. மேலும் நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என பன்முகத் திறமையுடன் விளங்கும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி திரைப்படம் இதுதான் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் உள்ள பலர் நடித்துள்ளனர்.

குறிப்பாக காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என ரவுன்ட் கட்டும் வைகை புயல் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு ஹீரோவுடனான காம்பினேஷனில் கலக்கவுள்ளார். மாமன்னன் படத்தில் இருந்து சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. வடிவேலு குரலில் வெளியான 'ராசா கண்ணு' என்ற அந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வடிவேலு குரலில் வந்துள்ள பாடல் என்பது மட்டுமின்றி யுகபாரதியின் வரிகளும் அருமையாக அமைந்தது.

மாமன்னன்
மாமன்னன்

இதனால், இப்படத்தின்‌ மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, பாடலின் காட்சி அமைப்பும் கர்ணன் படத்தை நினைவுகூருகின்றன. இக்கதையும் ஒரு உண்மை சம்பவமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ரெக்க என்ற பாடல் வெளியாகி அதுவும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க:"என்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன்" - சரத்குமார் சொல்வதென்ன?

அதேபோல படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் செக்கண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது. மாரி செல்வராஜ் இயக்கம் என்றால், அதில் ஆடம்பரம் அற்ற அட்டகாசம் அமைதியாக இருக்கும் அதற்கு அவரின் இயக்கத்தில் வெளியான "பரியேறும் பெருமாள்", "கர்ணன்" போன்ற திரைப்படங்கள் சிறந்த உதாரணம் என்றே கூறலாம். அந்த வகையில் மாமன்ன் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில்தான் நாளை மாமன்னன் படத்திற்கான இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் நெரு உள்விளையாட்டு அரங்கை சுற்றி போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: பட வாய்ப்பு இல்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்துகிறறோ.. கீர்த்தி ஷெட்டியின் டிரெண்டிங் பிக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.