ETV Bharat / entertainment

பிருந்தா மாஸ்டரால் கண்டிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும்... நடிகை குஷ்பு... - thugs movie

"தக்ஸ்" திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை நடிகை குஷ்பு பிருந்தா மாஸ்டரால் கண்டிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு
author img

By

Published : Sep 9, 2022, 11:19 AM IST

சென்னை: HR Pictures சார்பில் ரியா சிபு தயாரிப்பில், இந்திய அளவில் புகழ் பெற்ற முன்னணி நடன இயக்குநரான, பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'தக்ஸ்' திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஆர்யா, கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவியரசு, குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நடிகர் ஆர்யா கூறுகையில், “பிருந்தா மாஸ்டர் உடன் பல படங்கள் பணிபுரிந்துள்ளேன். அவருடைய நிஜ கதாபாத்திரம் ஆக்‌ஷனோடு தான் இருக்கும். அது இந்த படத்தில் பிரதிபலித்துள்ளது. பவர்புல்லான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இருக்கிறது. படத்தின் டீசரில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. தயாரிப்பாளர் சிபு, எல்லாவற்றிலும் தனித்துவத்தை எதிர்பார்க்கும் ஒருவர், இந்தப் படம் அவர் நினைத்தது போல் இருக்கும். இந்த படத்திற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

இயக்குனர் கௌதம் மேனன் பேசுகையில், “பிருந்தா ஒரு மான்ஸ்டர், என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர அவரும் ஒரு காரணம். வேட்டையாடு விளையாடு படத்தில் ’கற்க கற்க’ பாடலில் வரும் ஆக்‌ஷன் பகுதிகளை அவர் தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்‌ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமில்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

இயக்குனர் பார்த்திபன் பேசுகையில், “ஒரு டீசர் மூலமாக கதாபாத்திரத்தை வெளிக்காட்டியது. படத்தை பார்க்க வைக்கும் ஆவலை தூண்டுகிறது. பிருந்தா மாஸ்டருடன் பணிபுரிய எனக்கு பயமாக இருக்கும். வெவ்வேறு வகையான கதைகளத்தை இயக்குநர் பிருந்தா தேர்ந்தெடுத்து இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

நடிகை குஷ்பு பேசுகையில், "பிருந்தாவால் கண்டிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும், அவர் அதற்காகவே பழக்கப்பட்டவர். பிருந்தா மாஸ்டர் தான் உண்மையான தக். பிருந்தா சிறப்பானதை தவிர வேறு எதையும் கொடுக்க மாட்டார். ஒரு பெண் இயக்குனரால் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்ற பேச்சை அவர் உருவாக்குவார். படத்தின் நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்“ என்றார்.
அதன்பின் இயக்குனர் கே பாக்யராஜ் பேசுகையில், “படத்தின் டீசரில் ஆக்‌ஷன் திரைப்படத்துக்கான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. இந்த திரைப்படம் குண்டர்கள் எனப்படும் ரவுடிகளை பற்றிய கதை என்று தான் தெரிகிறது. பிருந்தா மாஸ்டரின் முதல் படம் காதல் படமாக இருந்தது, இப்போது அவரது இரண்டாவது படம் அதற்கு நேர் எதிராக ஆக்‌ஷன் படமாக இருக்கிறது. இது அவர் பல வகையான திரைப்படங்களை எடுக்க விரும்புகிறார் என்று காட்டுகிறது. படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். டீசர் பார்க்கும் போது படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கலாம். நன்றி" என்றார்.

பிருந்தா பேசுகையில், “எனது முதல் படமான ஹே சினாமிகாவில் இருந்து மாறுபட்டு ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று நினைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். எனது தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறி கொள்கிறேன். இந்த படத்தை எடுக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சிபு அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி" என்றார்.

நடிகர் ஆர் கே சுரேஷ் பேசுகையில், “தயாரிப்பாளர் சிபுவிற்கு எனது நன்றிகள், அவர் எல்லாவற்றிலும் அதிகமாக உழைப்பை தரும் ஒருவர். படத்தின் ஹீரோ ஹிருது, குமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபர் போல மாறி, படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார், அவருடைய அர்ப்பணிப்பு அவருக்கு பல வெற்றிகளை கொடுக்கும். இயக்குனர் பிருந்தா கடின உழைப்பை கொடுக்க கூடியவர், அவரது வேகம் எல்லோரையும் ஊக்கப்படுத்தும்.

இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்" என்றார். இந்தத் திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை பிரியேஷ் குருசாமியும், படத்தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனியும் செய்கின்றனர்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து சரிவை சந்திக்கும் ஆர்யா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.