ETV Bharat / entertainment

ரூ.225 கோடி வசூல்: சாதனைப்படைத்த 'பிரம்மாஸ்த்ரா'! - first installment of the big budget movie

சமீபத்தில் உலகெங்கும் வெளியான பாலிவுட் திரைப்படமான 'பிரம்மாஸ்த்ரா பார்ட் ஒன்: சிவா' திரைப்படம் 225 கோடி ரூபாய் வசூலித்து வசூல் சாதனைப் படைத்துள்ளது.

ரூ.225 கோடி வசூல்: ஒரே வாரத்தில் சாதனை படைத்த ’பிரம்மாஸ்த்ரா’..!

author img

By

Published : Sep 12, 2022, 6:45 PM IST

Updated : Sep 12, 2022, 8:02 PM IST

மும்பை: திரையரங்கில் வெளியாகிய முதல் வாரத்தில் உலகெங்கும் 225 கோடி ரூபாய் வசூலை நடிகர் ரன்பீர் கபூரின் 'பிரம்மாஸ்த்ரா' திரைப்படம் குவித்துள்ளது. இது குறித்த தகவலை, இந்தப்படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் இதற்கு முன்பு , ‘வேக் அப் சித்’, ‘யே ஜவானி ஹை தீவானி’ போன்ற வெற்றிப்படங்களை பாலிவுட்டில் தந்தவர். இவர் இயக்கத்தில், நடிகர்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவான ’பிரம்மாஸ்த்ரா பார்ட் ஒன்: சிவா’ திரைப்படம் கடந்த செப்.9 அன்று உலகெங்குமுள்ள திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இந்தப் படம் குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், “ரசிகர்களின் பெரும் வரவேற்பை பிரம்மாஸ்த்ரா பெற்று வருகிறது. அதற்கு ரசிகர்களுக்கு நன்றி. அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்வது தான் நாங்கள் திரைப்படம் எடுப்பதற்கு எங்களுக்கு கிடைக்கும் பெரும் வெகுமதி. பிரம்மாஸ்த்ராவின் அடுத்தடுத்த பாகங்கள் அனைத்தும் மக்கள் எங்களை வரவேற்பதைப் பொருத்தே அமையும்.

இத்தனை ஆண்டுகால எங்களின் உழைப்பிற்கு எங்களுக்கு தற்போது பலன் கிடைத்து வருகிறது” எனப் பதிவிட்டுள்ளார். ’பிரம்மாஸ்த்ரா பார்ட் ஒன்: சிவா’ இந்தி, தமிழ், கன்னடா, மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளில் உலகெங்கும் திரையிடப்பட்டு வருகிறது.

இந்தத் திரைப்படம் 2D, 3D, imax என அனைத்து திரைகளிலும் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் படத்தில் மௌனி ராய் மற்றும் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னட விநியோகத்தை தெலுங்கின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புஷ்பாவாக மாறிய ரன்வீர் - அல்லு அர்ஜூனின் மாஸ் ரியாக்‌ஷன்

Last Updated : Sep 12, 2022, 8:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.