ETV Bharat / entertainment

ஏழைங்கள ஏமாத்துறவனுக்கு நான் வெச்ச பேருதான் ‘பிக்கிலி’ - kollywood news

விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ஆன்டி பிக்கிலி என்னும் பாடல் இன்று வெளியாகியுள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 17, 2023, 11:04 PM IST

சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், கோடியில் ஒருவன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது மழை பிடிக்காத மனிதன், தமிழரசன், அக்னிச் சிறகுகள், கொலை, ரத்தம், வள்ளி மயில் என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவரது திரைப்படங்களில் எடிட்டராகவும் விஜய் ஆண்டனி பணியாற்றி வருகிறார். முன்னதாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். சசி இயக்கத்தில் வெளியான இந்த படம் மொழிகளைக் கடந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். அது மட்டுமின்றி முதல் முறையாக இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அவர் அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது படகு விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு தாடையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் ஆன்டி பிக்கிலியாக அவர் வருகிறார். பிக்கிலி என்றால் என்ன என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். அதற்கான விளக்கத்தை இன்று வெளியிடப்பட்ட பாடலின்‌ மூலம் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். அதாவது ஏழைகளை ஏமாற்றி பிழைக்கும் நபர்களுக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பிக்கிலி. இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிச்சைக்காரன் 2 திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்த போது பாடல்கள் எல்லாமே ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் வகையில் அமைத்திருப்பார். அது மட்டுமின்றி மெலோடி பாடல்களும் நன்றாக போடக் கூடியவர். பிச்சைக்காரன் படத்தில் அம்மா பாடல் மிகவும் ரசிக்கப்பட்டது. அதே போன்று பிச்சைக்காரன் 2 படத்திலும் அம்மா சென்ட்டிமென்ட் பாடல் இருக்குமா என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் (மார்ச் 16), “நண்பா... இவன்தான் பிக்கிலி கொஞ்சம் கவலப்படுங்க.. முடிஞ்சா பயப்புடுங்க.. இவனப்பத்தி, நாளைக்கி evening 4 மணிக்கி, BIKILI song-ல இன்னும் நிறைய சொல்றேன்” என விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

இதையும் படிங்க: ஆஸ்கர் விருதை நான் ஒரு பெரிய விருதாக நினைத்தது கிடையாது - இயக்குநர் அமீர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.