ETV Bharat / entertainment

ஆரவாரத்துடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7.. முதல் போட்டியாளராக நுழைந்த கூல் சுரேஷ்.. ஹவுஸ் மேட்ஸ் யார் யார் தெரியுமா? - bigg boss season 7 contestants list

bigg boss season 7: உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் தொடங்கியுள்ளது. இதில், ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளதால் பார்வையாளர்களுக்கு எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 10:20 PM IST

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நடந்து முடிந்த 6-வது சீசனில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லை அதற்குள் பெரிய பட்டாளத்துடன் தொடங்கியுள்ளது பிக் பாஸ் சீசன் 7. இந்த முறை ஒரு வீட்டிற்குப் பதிலாக இரு வீடுகளில் போட்டியாளர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு விதமான டாஸ்க்குகள் வழங்கப்படவுள்ளன.

இந்த சீசனில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷை கண்பெஷன் அறைக்கு அழைத்து குழு தலைவர் குறித்துப் பேசினார் பிக் பாஸ். இம்முறை கேப்டன் பதவிக்கான ஆளை வித்தியாசமான முறையில் பிக் பாஸ் தேர்ந்தெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டாவது போட்டியாளராகப் பூர்ணிமா ரவி, சரவண விக்ரம்(பாக்யலட்சுமி சீரியல் கண்ணன்), தொகுப்பாளர் விஷ்ணு விஜய், நடிகை ஐஸூ, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார், நடிகை அக்‌ஷயா உதயகுமார், நிக்‌ஷன், நடிகர் பிரதீப் ஆண்டனி உள்ளிடோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.