ETV Bharat / entertainment

நாளை 'பீஸ்ட்' ரிலீஸ்: உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்! - Beast release

நடிகர் விஜய் நடிப்பில் ’பீஸ்ட்’ திரைப்படம் நாளை(ஏப்.13) உலகமெங்கும் வெளியாகிறது.

நாளை முதல் ‘பீஸ்ட்’ வெளியீடு: உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

author img

By

Published : Apr 12, 2022, 5:45 PM IST

சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை(ஏப்.13) முதல் வெளியாகிறது. 'டாக்டர்' படத்தை அடுத்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இப்படத்தில் விஜய் 'வீரராகவன்' என்கிற 'ரா' உளவுப்பிரிவு அலுவலராக நடித்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சென்னையில் வணிக வளாகம் ஒன்று பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்படுகிறது. அதில் பிணைக்கைதிகளாய் சிக்கியுள்ளவர்களை விஜய் எவ்வாறு காப்பாற்றினார் என்பதே 'பீஸ்ட்' படத்தின் கதை.

இப்படம் உலகம் முழுவதும் நாளை(ஏப்.13) வெளியாகிறது. கத்தார், குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்; தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. படம் வெளியாவதை ஒட்டி இன்றுமுதலே விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: சூர்யா மற்றும் கார்த்தி பிரிந்தனர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.