ETV Bharat / entertainment

அசோக் செல்வன் நடித்துள்ள புளூ ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - cinema news

Blue Star Movie: அறிமுக இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புளூ ஸ்டார் திரைப்படம் வருகிற ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

blue star movie release date Announcement
புளூ ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 1:18 PM IST

சென்னை: நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் தனித்துவம் மிக்க நடிகராக வலம் வருபவர். த்ரில்லர், காமெடி, காதல் என பல பரிணாமத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'சபா நாயகன்' திரைப்படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், கடந்த ஆண்டுதான் நடிகை கீர்த்தி பாண்டியனை இவர் காதலித்து கரம் பிடித்தார்.

இந்நிலையில், தற்போது இவரது நடிப்பில் 'புளூ ஸ்டார்' என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் உடன் கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய எஸ்.ஜெயகுமார், இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மேலும், தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் ஒன்று, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகி இருக்கிறது, இந்த புளூ ஸ்டார்.

இதையும் படிங்க: நடிகர் சுனில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம்!

தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பினை படக்குழு வெளியிட்டு உள்ளது. அந்த வகையில், ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை, சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது. இப்படத்தை லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.ரஞ்சித் இணைந்து தயாரித்துள்ளனர்.மேலும், நடிகர் சாந்தனுவுக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய்சேதுபதிக்கு முன்னர் இவர்தான் எனது சாய்ஸ்.. மெரி கிறுஸ்துமஸ் இயக்குநர் கூறிய பிரபலம் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.