ETV Bharat / entertainment

'இறுதியில் எப்போதும் உண்மை தான் வெல்லும்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து அறிவு! - சந்தோஷ் நாராயணன்

'இந்த பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான்.  இந்த பாடலை எழுத யாரும் எனக்கு மெட்டு தரவில்லை, ஒரு வார்த்தை கூட தரவில்லை. இறுதியில் எப்போதும் உண்மை தான் வெல்லும்', என என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து அறிவு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

'இறுதியில் எப்போதும் உண்மை தான் வெல்லும்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து அறிவு

author img

By

Published : Aug 1, 2022, 2:20 PM IST

பாடலாசிரியர் அறிவு எழுதி சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான ’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலை அறிவு மற்றும் பாடகி தீ ஆகியோர் பாடியிருந்தனர்.

இந்த பாடலுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பாடலாசிரியர் மற்றும் பாடகரான அறிவிற்கு எங்கும் முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இதுகுறித்து அறிவு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமலிருந்த நிலையில், தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் கருத்து தெரிவித்துள்ளார்.

”இந்த பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இந்த பாடலை எழுத யாரும் எனக்கு மெட்டு தரவில்லை, ஒரு வார்த்தை கூட தரவில்லை. இதற்காக 6 மாதங்கள் ஒழுங்காக உறங்காமல் பாடுபட்டு உழைத்துள்ளேன்.

இது அனைவரின் கூட்டு முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பாடல் வள்ளியம்மாலின் வரலாறோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமைகளாக வாழ்ந்த என் முன்னோர்களின் கதை மட்டும் அல்ல. என்னுடைய எல்லா பாடல்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலி இருக்கும். இந்த மண்ணில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.

என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து மனந்திறந்த  அறிவு

அந்த பாடல்கள் நம் முன்னோர்களின் வலி, வாழ்க்கை, காதல் என அவர்களின் மொத்த இருப்பினை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பாடல்கள் மூலம் நாம் நம் மரபினை சுமந்து வருகிறோம். நம் பொக்கிஷத்தை நாம் தூங்கும் போது யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஆனால் முழித்திருக்கும் போது அது முடியாது. இறுதியில் எப்போதும் உண்மை தான் வெல்லும்” என பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பாடகி தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் ஆகியோர் ’என்ஜாய் எஞ்சாமி’ பாடலை பாடினர், ஆனால் இதில் அறிவு பங்கேற்காத நிலையில், அறிவின் இந்த பதிவு அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: புகை பிடிக்கும் காட்சி : நீதிமன்றத்தில் ஆஜராக தனுசுக்கு விலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.