ETV Bharat / entertainment

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி: பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திருப்பி அளிப்பு! - ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி போலீஸ் விசாரணை

AR Rahman concert issue: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரே பொறுப்பேற்று பணத்தை திருப்பி அளிப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில், அவரது அலுவலக வங்கிக் கணக்கில் இருந்து பாதிக்கப்பட்ட ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்பி வழங்கப்பட்டு வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 7:39 PM IST

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறைப் பயணத்தின் 30வது ஆண்டை கொண்டாடும் வகையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில், நேரலை இசை நிகழ்ச்சி (Live In Concert) கடந்த செப்.10ஆம் தேதி பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதற்காக அரங்கு அமைக்கப்பட்டு சில்வர், கோல்டு, பிளாட்டினம் என்று பல்வேறு படிநிலை விலையில் பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், அரங்கினுள் கூட்டம் அலை மோதியதாக கூறி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் வைத்திருந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் டிக்கெட் வைத்திருந்தவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.‌ இந்த கூட்டத்தில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும், மேலும் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்ததாகவும் புகார் எழுந்தது.

இசை நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு முறையான வாகன நிறுத்தம் செய்யப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த இடமே போராட்டக் களமாக காட்சியளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்ட நிலையில், ஏஆர் ரஹ்மான் அத்தனை குளறுபடிகளுக்கும் தானே பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பி அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் மீது திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.‌ மேலும், பல்வேறு திரைப் பிரபலங்கள் ஏஆர் ரஹ்மானுடன் துணை நிற்பதாக அவருக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், பணத்தை திருப்பி வழங்குவதற்காக வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு இதுவரை 4,000 புகார்கள் வந்திருந்தது‌. இந்த நிலையில், ஏஆர் ரஹ்மானின் அலுவலக வங்கிக் கணக்கில் இருந்து தற்போது பாதிக்கப்பட்ட ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்பி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 600க்கும் மேற்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.5,000, ரூ.10,000, ரூ.25,000 என டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் உரிய பணத்தை திருப்பி வழங்கியுள்ளார் ஏஆர் ரஹ்மான். நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் இதற்கு பொறுப்பேற்ற நிலையில், ஏஆர் ரஹ்மானே தானாக முன்வந்து முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.