சென்னை: இது குறித்து பேசிய எச்.வினோத், 'துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரம். என்ன துணிவு என்பதே படமாக இருக்கும். இது சீரியஸான படம் கிடையாது. மிகவும் சுவாரஸ்யமாக படத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனக்கும் அஜித்துக்குமான உறவு ஆரோக்கியமானது. இருவரும் அதிகமாக படத்தை பற்றித்தான் பேசியுள்ளோம். பான் இந்தியாவுக்காக படங்களை எடுக்கத் தேவையில்லை. அந்த கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே, பான் இந்தியா படமாக எடுக்க வாய்ப்புள்ளது.
முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது. இதனை போட்டியாக பார்க்காமல் ஆரோக்கியமாக மாற்றுவது ரசிகர்களின் கையில் தான் உள்ளது. பொங்கலுக்கு மூன்று நாட்கள் விடுமுறை இருக்கிறது. பணம் இருப்பவர்கள் இரண்டு படங்களையும் பாருங்கள். இல்லாதவர்கள் ஒரு படத்தை தேர்வு செய்து பாருங்கள்.
அஜித் பைக் ஓட்டுவார், சமைப்பார். இவற்றை எல்லாம் தாண்டி அவரிடம் இருக்கும் இன்னொரு முகம், அவர் மிகப் பெரிய அக்கவுன்டன்ட். அவரது பொருளாதாரத்தை அவரே கையாள்பார். மற்றவர்களுக்கும் இதைத்தான் சொல்வார். நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், அந்த வரிக்கான பணத்தை தனியாக வங்கிக் கணக்கில் போட்டுவிடுங்கள். அது தனக்கானது அல்ல என்று நினைத்துக் கொள்ளுங்கள். வருமானத்தில் கொஞ்சம் உதவி செய்ய கொடுங்கள் என என்னிடம் பேசியிருக்கிறார்.
அடுத்து அவர் கூப்பிட்டால் படம் பண்ணத் தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் தங்களது நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று நினைப்பவர், அஜித். சினிமா ஒரு பகுதிதான்; அதுவே வாழ்க்கை அல்ல. உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள் என்று சொல்வார்’ என இயக்குநர் எச். வினோத் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க:வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து - தமிழ்நாடு அரசு