சென்னை: அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில், கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான அனிமல் (Animal) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தந்தைக்கும் மகனுக்குமான அளவு கடந்த அன்பை விளக்கும் இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இப்படம் வெளியான 3 நாட்களுக்குள் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. அனிமல் திரைப்படம் வெளியான முதல் நாளில் (டிச.1) 63.80 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில், 66.27 கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் 72.50 கோடி ரூபாயும் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
-
#Animal Sun / Day 3 at national chains…
— taran adarsh (@taran_adarsh) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
⭐️ #PVRInox: ₹ 23 cr
⭐️ #Cinepolis: ₹ 6 cr
⭐️ Total: ₹ 29 cr
Fri: ₹ 24.60 cr
Sat: ₹ 27.55 cr pic.twitter.com/OZ5HS8RWhx
">#Animal Sun / Day 3 at national chains…
— taran adarsh (@taran_adarsh) December 3, 2023
⭐️ #PVRInox: ₹ 23 cr
⭐️ #Cinepolis: ₹ 6 cr
⭐️ Total: ₹ 29 cr
Fri: ₹ 24.60 cr
Sat: ₹ 27.55 cr pic.twitter.com/OZ5HS8RWhx#Animal Sun / Day 3 at national chains…
— taran adarsh (@taran_adarsh) December 3, 2023
⭐️ #PVRInox: ₹ 23 cr
⭐️ #Cinepolis: ₹ 6 cr
⭐️ Total: ₹ 29 cr
Fri: ₹ 24.60 cr
Sat: ₹ 27.55 cr pic.twitter.com/OZ5HS8RWhx
அதே போல் அனிமல் திரைப்படம் மூன்றாவது நாளில் 72.50 கோடி ரூபாயை ஈட்டி, மூன்று நாட்களில் 202.57 கோடி ரூபாயை வசூல் செய்தது. இந்த வசூல் பதான் (மூன்று நாட்களில் 166.75 கோடி ரூபாய்), ஜவான் (206.06 கோடி ரூபாய்) போன்ற அதிக வசூல் கொடுத்த படங்களின் வசூலை விட குறைவாகும்.
ஆனால் அனிமல் திரைப்படத்தின் உள்நாட்டு நிகர வருவாய் பதான் படத்தின் முதல் நாள் வசூலை ரூ.60.75 கோடி விட அதிகமாகும். ஜவானின் ரூ.80.1 கோடியை விட குறைவு.
-
‘ANIMAL’ IS A BOXOFFICE MONSTER…#Animal goes WILD on Day 2 [Sat]… Metros, non-metros, mass pockets - the response is OUTSTANDING, takes the 2-day total to over ₹ 💯 cr… Day 3 [Sun] biz will place it amongst the biggest *opening weekend* scorers of all time… Fri 54.75 cr,… pic.twitter.com/xtUzgzSjMn
— taran adarsh (@taran_adarsh) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">‘ANIMAL’ IS A BOXOFFICE MONSTER…#Animal goes WILD on Day 2 [Sat]… Metros, non-metros, mass pockets - the response is OUTSTANDING, takes the 2-day total to over ₹ 💯 cr… Day 3 [Sun] biz will place it amongst the biggest *opening weekend* scorers of all time… Fri 54.75 cr,… pic.twitter.com/xtUzgzSjMn
— taran adarsh (@taran_adarsh) December 3, 2023‘ANIMAL’ IS A BOXOFFICE MONSTER…#Animal goes WILD on Day 2 [Sat]… Metros, non-metros, mass pockets - the response is OUTSTANDING, takes the 2-day total to over ₹ 💯 cr… Day 3 [Sun] biz will place it amongst the biggest *opening weekend* scorers of all time… Fri 54.75 cr,… pic.twitter.com/xtUzgzSjMn
— taran adarsh (@taran_adarsh) December 3, 2023
இந்த நிலையில் அனிமல் திரைப்படத்தின் நான்காவது நாளான இன்று பதிவான முன்பதிவுகளின் அடிப்படையில் 11.19 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் அனிமல் திரைப்படம் உலகளவில் 360 கோடியை ஈட்டி, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தனது X தளத்தில், அனிமல் திரைப்படம் 3 நாட்களில் 360 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: ஆண் நண்பருடன் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம்! வீடியோ வைரல்!