நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து எச்.வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஏற்கெனவே மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்படத்தை வெற்றி படமாக கொடுக்க வினோத் கடுமையாக உழைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சில காரணங்களால் படம் தீபாவளி ரிலீஸில் பின்வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மேலும் டிசம்பர் மாதம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு தான் உண்மை தெரிய வரும்.
இதையும் படிங்க: Thalapathy 66 : வெளியானது 'வாரிசு' ஃபர்ஸ்ட் லுக்..!