மும்பை : அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ரன்வே 34 (Runway 34) விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவரின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போலா (Bholaa) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கைதி (Kaithi) படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் ஆகும். ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள போலா படத்தில், நடிகை தபு போலீஸ் வேடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்தப் படம் குறித்த அறிவிப்பை அஜய் தேவ்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், “தமிழ் படமான கைதியின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக போலா உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் என்னுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தபு போலீஸ் அலுவலராக நடிக்கிறார்.
படத்தை தர்மேந்திரா சர்மா இயக்கவுள்ளார். படம் அடுத்த ஆண்டு (2023) மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை அஜய் தேவ்கனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனம், டிசீரிஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
தேங்க் காட் (Thank God), மைதான் (Maidaan) மற்றும் திரிஷ்யம் - (Drishyam 2) ஆகிய படங்களுக்கு பிறகு அஜய் தேவ்கனின் ரன்வே 34 (Runway 34) மற்றும் போலா (Bhola) உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. கைதி தமிழ் படத்தை லோகேஷ் கனகராஜ் ரூ.32 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : சகாரா பூக்கள் பூத்ததோ?