தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை குவித்தது. இவர் தற்போது பிரின்ஸ், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ’மாவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சத்தமே இல்லாமல் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அந்த வாய்ப்பை தட்டிச் சென்றுள்ளார். அதிதி தற்போது கார்த்தி நடிப்பில் விருமன் படத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க : '''விஜயானந்த்' படத்தை தமிழில் வெளியிடுவது பெருமிதமாக உள்ளது'' - நெகிழும் கன்னடத் தயாரிப்பாளர்!