நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மைப்பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50ஆவது திரைப்படமான 'மஹா' படம் ஏற்கெனவே ரசிகர்களிடம் விஷுவல் புரோமோக்களின் மூலம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹன்ஷிகா மோத்வானி முதன்மைப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிம்பு, கவுரவப் பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
U.R.ஜமீல் இயக்கும் இப்படத்தை, Etcetera Entertainment நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார். கரோனா பரவல் காரணமாக வெளியீட்டில் தாமதமாகி வந்த இப்படம் இந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பத்த வைச்ச "பத்தல" பாடல் : ஒன்றியத்தை வம்பிழுத்ததாக போலீசில் புகார்