சென்னை: தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்தவர், நடிகர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், லத்தி. இப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. ஆரம்ப காலத்தில் சண்டக்கோழி, தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்து அதிரடி நாயகனாக மாறினார். இதில் தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ஹரி இயக்கியிருந்தார். ஹரி படங்கள் எப்பவுமே பரபரப்பு காட்சிகள் நிறைந்து தான் இருக்கும். தாமிரபரணி திரைப்படமும் அதே பாணியில் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் பூஜை என்ற படத்தில் இணைந்தது. இப்படமும் வெற்றிப் படமாக அமைந்தது. ஆகையால், இந்த இருவர் கூட்டணி இணைந்தாலே நல்ல ஆக்ஷன் படம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் விஷால் - ஹரி கூட்டணி இணைந்துள்ளது. ஹரி கடைசியாக அருண் விஜய் நடித்த 'யானை' படத்தை இயக்கியிருந்தார். இயக்குநர் ஹரி சூர்யா நடிப்பில் 'அருவா' என்ற படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார். நீண்ட வருடங்களாக அது தள்ளிக்கொண்டே போன நிலையில், நடிகர் அருண் விஜய்யை வைத்து 'யானை' படத்தை இயக்கினார்.
தற்போது சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடி வாசல்' படத்தில் நடிக்க உள்ளார். இதனால் ஹரி படத்தில் நடிப்பது தள்ளிப்போய் கொண்டே இருப்பதால், இதற்கு இடையில் வேறு ஒரு படத்தை இயக்க ஹரி முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே 2 முறை வெற்றிப் படங்களை கொடுத்த விஷால் உடன் இணைந்து ஹரி படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார். மேலும் இவர்களுடன் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்துள்ளது.
விஷாலின் 34-வது படமான இது ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக உருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. மேலும் படக்குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது.
-
Super excited to join hands with Director Hari Sir for a 3rd time,
— Vishal (@VishalKOfficial) April 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It’s going to be a blast and I am looking forward to it, GB#Vishal34
Produced by @stonebenchers and @ZeeStudiosSouth @kaarthekeyens @karthiksubbaraj pic.twitter.com/NpAjX1R9mt
">Super excited to join hands with Director Hari Sir for a 3rd time,
— Vishal (@VishalKOfficial) April 23, 2023
It’s going to be a blast and I am looking forward to it, GB#Vishal34
Produced by @stonebenchers and @ZeeStudiosSouth @kaarthekeyens @karthiksubbaraj pic.twitter.com/NpAjX1R9mtSuper excited to join hands with Director Hari Sir for a 3rd time,
— Vishal (@VishalKOfficial) April 23, 2023
It’s going to be a blast and I am looking forward to it, GB#Vishal34
Produced by @stonebenchers and @ZeeStudiosSouth @kaarthekeyens @karthiksubbaraj pic.twitter.com/NpAjX1R9mt
இயக்குநர் ஹரியுடன் நடிகர் விஷால் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்ளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹரி மற்றும் விஷாலின் காம்போவில் வெளியான 2 படங்களுமே நல்ல வரவேற்பு பெற்ற படங்கள். ஆகையால் இப்படத்திற்கும் நல்ல மார்க்கெட் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாகனங்களை வழி மறித்த யானை கூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!