ETV Bharat / entertainment

சீரியலில் நடித்திருக்கும் சத்யராஜ்! காரணம் என்ன? - பாலிவுட்

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் N J.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம்  வீட்ல விஷேசம் இத்திரைப்படத்தில் சத்யராஜ் ஊர்வசி ஆர்.ஜே.பாலாஜி அபர்ணா பாலமுரளி ஆகிய பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் இந்தப் படத்தின் விளம்பரத்திற்கு நிகழ்ச்சிகள் பேட்டிகளை தாண்டி மற்றொரு வித்தியாசமான விளம்பர யுக்தியில் படக்குழு ஈடுபட்டுள்ளது

சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்த கட்டப்பா!!

author img

By

Published : Jun 13, 2022, 1:50 PM IST

Zee Studios & Bayview Projects ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் N J.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் “வீட்ல விஷேசம்”. இத்திரைப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஆகிய பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.மேலும் இந்தியில் வெற்றி பெற்ற ”பதாய் ஹோ” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த படம் வரும் ஜூன் 17ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்தப் படத்தை படக்குழு சிறப்பான முறையில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். நிகழ்ச்சிகள்,பேட்டிகளை தாண்டி மற்றொரு வித்தியாசமான விளம்பர யுக்தியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ’புதுப்புது அர்த்தங்கள்’ மெகா தொடரில் "வீட்ல விஷேசம்" படக்குழுவினர் நடித்துள்ளார்கள். வித்தியாசமான இந்த முயற்சியில் முதல்முறையாக நடிகர் சத்யராஜ் மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரும் மெகா தொடரில் நடித்துள்ளனர். இதன்மூலம் நடிகர் சத்யராஜ் முதன் முதலில் மெகா தொடரில் நடித்துவிட்டார்.

இவரை சின்னத்திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: 'ஜெய் பீம் படத்திற்கு எங்களுக்கு ராயல்டி வேண்டும்' - ராஜாகண்ணு குடும்பத்தினர் மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.