ETV Bharat / entertainment

Fahadh Faasil: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஃபேவரைட் வில்லனாகும் ஃபகத் ஃபாசில்! - fahadh faasil tamil movies

மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து, மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் ஃபகத் ஃபாசில் குறித்த சிறப்பு தொகுப்பைக் காணலாம்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 1, 2023, 8:32 PM IST

முதல் படத்தில் ஹீரோவுக்காக வகுக்கப்பட்ட எந்த ஒரு தகுதியும் இல்லை என சினிமா விமர்சகர்களால் ஒதுக்கப்பட்டார். சில வருடங்களுக்குப் பிறகு, கேரளா கஃபே என்ற அந்தாலஜியில் மிருத்துன்ஜெயம் என்ற குறும்படத்தில் மலையாள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு அன்னாயும் ரசூலும், நார்த் 24 கதம், மகேஷிண்டே பிரதிகாரம், என தொடங்கி மாலிக், மலையான்குஞ்சு, தமிழ் சினிமாவில் விக்ரம் வரை பல படங்களில் நடித்து இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார், ஃபகத் ஃபாசில்.

ஃபகத் ஃபாசில் என்னதான் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றாலும் அவரின் நெகட்டிவ் கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஃபகத் ஃபாசில் தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்திலேயே ’சப்பா குரிஷு’ (chappa kurishu) என்ற படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார். மேலும் இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ’22 female kottayam' என்ற படத்தில் வில்லனாக நடித்தார். இந்தப் படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் தமிழில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற பெயரில் ரீமேக்கானது. இந்த படத்திற்குப் பிறகு, ஃபகத் ஃபாசில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். பெங்களூரு டேஸ், ட்ரான்ஸ், கும்பளாங்கி நைட்ஸ் என சில படங்களில் இந்திய சினிமாவையே, தனது தனித்துவமான நடிப்பு மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

குறிப்பாக, தொண்டிமுதலும் த்ரிசாக்‌ஷியும் (thondimuthalum drikshasiyum) ஃபகத்துக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்தப் படத்தில் நகை திருடி மாட்டிக் கொண்ட பின், அந்த நகையின் உரிமையாளரிடம் சமரசம் பேசும் காட்சி தொடங்கி, போலீசையே குழப்பும் காட்சி வரை தனது வில்லத்தனம் கொண்ட நடிப்பால் ஆடியன்ஸை ஈர்த்திருப்பார். இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

மலையாள சினிமாவில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் ’வேலைக்காரன்’, ’சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். குறிப்பாக, ‘கும்பளாங்கி நைட்ஸ்’ (kumbalangi nights) படத்தில் பகத் பாசில் ஷமி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பார்ப்போரை நடுங்கும் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

’ஷமி ஹீரோடா’ என வசனம் கூறும் காட்சி, அமைதியாக சிரித்துக்கொண்டு வீட்டில் நடப்பதைக் கவனிப்பது என ஷமி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். அதேபோல் ஜோஜி படத்தில் சொத்துக்காக தனது குடும்பத்தினரை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் படத்தை பார்ப்பவர்களுக்கு ஒரு வித பய உணர்வை ஏற்படுத்தியிருப்பார்.

ஃபகத் ஃபாசில், மலையாளத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லன் கேரக்டரில் பிறமொழிகளில் நடிக்கும் படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கத் தொடங்கினர். அதற்குச் சிறந்த உதாரணமாக தெலுங்கில் ஃபகத் ஃபாசில் நடித்த புஷ்பா முதல் பாகத்தைக் கூறலாம். அந்த முதல் பாகத்தில் ஃபகத் ஃபாசில் சிறிது நேரம் நடித்திருந்தாலும் வில்லன் கதாபாத்திரம் என்பதால் தியேட்டரில் ரசிகர்கள், அவரை கொண்டாடி தீர்த்தனர். ஓடிடி வளர்ச்சிக்கு பிறகு ஃபகத் ஃபாசிலின் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது எனக் கூறலாம்.

மற்ற மொழி ரசிகர்கள் மத்தியில் ஃபகத் ஃபாசில் ஒரு மலையாள சினிமா நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து அவருடன் மற்ற நடிகர்கள் நடித்தால், அவர்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு நடிக்கும் திறன் கொண்டவர் என கெத்தாக வலம் வருகிறார். அதற்குச் சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தைக் கூறலாம்.

'மாமன்னன்' படத்திற்கு வரவேற்பைப் பார்த்தால் அவர் கிட்டத்தட்ட அவர் தமிழ் நடிகராகவே மாறிவிட்டார் என கூறலாம். இந்நிலையில் தனது ஆரம்ப காலகட்டத்தில் மலையாள சினிமா விமர்சகர்களால், வழுக்கை தலையன் என விமர்சிக்கப்பட்ட ஃபகத் ஃபாசில் இன்று இந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத பான் இந்தியா ஸ்டாராக அசுர வளர்ச்சி கண்டுள்ளார்.

இதையும் படிங்க: மாரி செல்வராஜூக்கு தலைவலியாக அமைந்த ஃபகத் ஃபாசில்! இளைஞர்களை திசை திருப்புகிறதா மாமன்னன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.