இயக்குனர் ஹெச் வினோத்துடன் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித் குமார், சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் ஐரோப்பாவில் சாலைப் பயணம் சென்றுள்ளார்.
ஏற்கனவே அஜித் பி.எம்.டபுள்யூ(BMW) பைக்கில் பயணம் செய்யும் படங்கள் சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வரிசையில் அஜித் தனது நண்பர்களுடன் பைக்கிற்கு பெட்ரோல் போட்டு கொண்டு பயணம் செய்யும் மேலும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
அஜித் ஹெச்.வினோத் கூட்டணியில் இதற்கு முன் வெளியான ‘வலிமை’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றதால் ; தற்போது ஹெச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கி வரும் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தாய் கிழவி' பாடல் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்!