ETV Bharat / elections

தேனிக்கு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் - சஞ்சய் தத் - campaign

தேனி: தேனி மக்களவைத் தொகுதிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் வலியுறுத்தியுள்ளார்.

தேனிக்கு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் - சஞ்சய் தத் வலியுறுத்தல்
author img

By

Published : Apr 9, 2019, 6:23 PM IST

தேனி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஏப்ரல் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேனி அருகே உள்ள அன்னஞ்சி விலக்கு பகுதியில் ராகுல் காந்தி பரப்புரை செய்வதற்கான இடத்தை பார்வையிட்ட சஞ்சய் தத், ஓபிஎஸ் மூன்று முறை முதலமைச்சராக இருந்த பிறகும் அவரது சொந்த மாவட்டத்தில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் செய்து தரப்படவில்லை எனவும், இன்றளவும் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த பகுதியாகவே தேனி உள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.

தேனியை இந்தியாவின் முதல் மாவட்டமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மாற்றிக்காட்டுவார் என நம்பிக்கை தெரிவித்த சஞ்சய் தத், தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

பரப்புரை வாகனங்களுக்கான தேர்தல் ஆணைய அனுமதி சீட்டினை கலர் ஜெராக்ஸ் எடுத்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான வாகனங்களில் பணம் கொண்டு செல்வதால் தேனி மக்களவைத் தொகுதிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Intro: தேனி பாராளுமன்ற தொகுதிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் வலியுறுத்தல்.

Body: தேனி பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வரும் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேனியில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இதற்காக தேனி அருகே உள்ள அன்னஞ்சி விலக்கு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. அந்த இடத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பிளருமான சஞ்சய் தத் இன்று பார்வையிட்டார்.
பின்னர் தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தங்கியிருக்கும் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தேனி அழகான நகரம், ஆனால் இதுவரை எந்த வளர்ச்சியும், முன்னேற்றமும், இங்கு ஏற்படவில்லை. ரயில் சேவை இல்லாத மாவட்டமாக தேனி திகழ்கிறது.
தமிழக துணை முதல்வரின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலை ஏற்படுத்தி தர வேண்டும் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றித்தரவில்லை. ஓபிஎஸ் மூன்று முறை முதல்வராகவும் இருந்துள்ளார். ஆனால் அவரது சொந்த மாவட்டத்தில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் செய்து தரப்படவில்லை. இன்றளவும் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த பகுதியாகவே உள்ளது என்று குற்றச்சாட்டு வைத்தார்.
வரும் 12ம் தேதி தேனிக்கு வர உள்ள ராகுல் காந்தி மக்களை சந்தித்து கலந்துரையாட இருக்கிறார். இந்தியாவின் முதல் மாவட்டமாக தேனியை மாற்றப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்கிறது. அதிமுக - பாஜக வாகனங்களை பறக்கும் படையினர் சோதனை செய்வதில்லை. அதில் தான் பணம் சப்ளை செய்யப்படுகிறது. பிரச்சார வாகனங்களுக்கான தேர்தல் ஆணைய அனுமதி சீட்டினை கலர் ஜெராக்ஸ் எடுத்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான வாகனங்களில் செல்கிறார்கள்.
எனவே தேனி தொகுதிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளரை நியமிக்க வேண்டும். இது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மோடியின் ரிமோட்டுக்கு ஏற்றபடி ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் டான்ஸ் ஆடுகிறார்கள். என்றார்.
மேலும் பாஜகவின் தேர்தல் அறிக்கை எப்போதும் போலத்தான் இருக்கிறது. எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் அறிவிக்கப்படவில்லை. முன்னர் அறிவித்த தேர்தல் அறிக்கையை மீண்டும் கூறுகின்றனர். 25ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டுவோம், கட்டுவோம் என்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வரும் அரசியலமைப்பு சட்டம் 370நீக்கப்படும் என்கிறார்கள் இப்போதுவரை நீக்கப்படவில்லை.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மோடியின் படம் மட்டுமே உள்ளது. காங்கிரஸ் அறிக்கையில் சாமானிய மக்களின் படமும் போடப்பட்டுள்ளது இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். பாஜகவின் முன்னணி தலைவர்களான அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களை புறக்கணித்து மோடியை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றனர். மோடியும், அமித் ஷாவும் சேர்ந்து பணமதிப்பிழப்பு கொண்டுவந்து பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்து விட்டனர்.

Conclusion: இந்த சந்திப்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்பட தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பேட்டி : சஞ்சய் தத். ( அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்).
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.