மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை பற்றி பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, லோக் தந்திரிக் ஜனதா கட்சி தலைவர் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்க உள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து கொள்வது பாஜகவுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கி மத்தியில் ஆட்சி அமைக்கதான் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.