ETV Bharat / crime

கஞ்சா விற்பனை: இருவர் கைது, 6 கிலோ கஞ்சா பறிமுதல்! - தூத்துக்குடி செய்திகள்

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து சுமார் ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - சுமார் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

author img

By

Published : Mar 13, 2021, 8:09 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுப்பதற்கு பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்துப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, ஆறுமுகநேரி சோதனைச்சாவடி அருகே காயல்பட்டினம் மன்னர் ராஜா கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (32) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த காவலர்கள், அவரிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர். இது குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதேபோன்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான காவல் துறையினர், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உடன்குடி தேரியூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறம் உடன்குடி தேரியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த சரத்குமார் (27) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இதில் அவரிடமிருந்த ஒரு கிலோ 750 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் ஐந்து கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

இதையும் படிங்க...Election Updates: மார்ச் 14 முதல் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.