ETV Bharat / crime

Trichy SSI Murder: திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை

திருச்சி அருகே ஆடு திருடும் கும்பலை விரட்டி சென்ற, காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் (Trichy SSI Murder) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

Trichy Sub inspector BOOMINADHAN Murder, Sub inspector muder
கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன்
author img

By

Published : Nov 21, 2021, 9:23 AM IST

Updated : Nov 21, 2021, 12:19 PM IST

திருச்சி: நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (56). இவர் நேற்றிரவு (நவ. 20) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, பூமிநாதன் நவல்பட்டு மெயின்ரோட்டில் மூன்று இருசக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்த முயற்சித்தார்.

அவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர். ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்துகொண்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களை தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிசென்றார். அந்த நபர்கள் திருச்சி-புதுக்கோட்டை மெயின்ரோட்டில் களமாவூர் ரயில்வே கேட் அருகே பள்ளத்துப்பட்டி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

Trichy Sub inspector BOOMINADHAN Murder, Sub inspector muder
கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்

சம்பவ இடத்தில் உயிரிழப்பு

அப்போது, ஒரு இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்திய பூமிநாதன், அதில் பயணித்த இரண்டு நபர்களை பிடித்தார். தப்பிச்சென்ற மற்றவர்கள் தங்கள் வாகனத்தில் திரும்பி வந்து பூமிநாதனிடம் தகராறு செய்து, பிடிபட்ட நபர்களை விடுவிக்குமாறு கூறியுள்ளனர் .

ஆனால், பூமிநாதன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினர். படுகாயமடைந்த பூமிநாதன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மூன்று மணிநேரம் சாலையில் கிடந்த உடல்

ஆடுகளை திருடிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் அதிகாலை சுமார் அதிகாலை இரண்டு மணியளவில் நடந்துள்ளது. எனினும், அதிகாலை ஐந்து மணியளவில் தான் அவ்வழியாக சென்றவர்கள், உதவி ஆய்வாளர் உடலை கண்டுள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்டதாகும்.

எனினும், இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறை உயர் அலுவலர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், ஆடு திருடிய கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தின்பண்டம் எடுத்த மகள்.. கொலைகாரன் ஆன மாற்றான் தந்தை... குடும்பத்தை குடித்த தீ!

Last Updated : Nov 21, 2021, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.