திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த்திற்கு எரிசாராயம் கடத்துவது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர்களின் தலைமையில் தூசி காவல் நிலைய காவல் துறையினர் நேற்று (மே.29) இரு குழுக்களாக, இருவேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
140 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
குண்டியாண்தண்டலம் அருகே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியே வந்த மகேந்திரா சைலோ வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர், காவல்துறையினரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். சந்தேகதமடைந்த காவல்துறையினர் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 140 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது.
210 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
பூனைதாங்கள் கூட்ரோடு அருகே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த மகேந்திரா பிக்கப் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடினார். சந்தேகதமடைந்த காவல்துறையினர் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 210 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது .
மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் குறித்தும், செய்யாறு மதுவிலக்கு பிரிவில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.