ETV Bharat / crime

மசாஜ் சென்டருக்கு சென்று வரும் முதியவர்களுக்கு குறி; போலீஸ் என கூறி பணம் பறித்த இருவர் கைது.. - சிசிடிவி

மசாஜ் சென்டருக்கு சென்று வரும் முதியவர்களை குறிவைத்து போலீஸ் எனக்கூறி கூகுள் பே மூலம் ரூ.20 ஆயிரம் பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம் பறித்த போலி போலீஸ் கைது
பணம் பறித்த போலி போலீஸ் கைது
author img

By

Published : Nov 15, 2022, 7:15 AM IST

சென்னை: அடையாறு, கஸ்தூரிபாய் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்( 65). இவர் கடந்த 5 ஆம் தேதி கஸ்தூரிபாய் நகர், தனலட்சுமி அவென்யூவில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்று கால்களுக்கு மசாஜ் செய்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

கஸ்தூரிபாய் நகர், மூன்றாவது தெரு அருகே நடந்து வந்த போது இரண்டு பேர் நாகராஜை வழிமறித்து தாங்கள் போலீஸ் என்று மிரட்டும் தொனியில் பேசினர். பின்னர் நாகராஜிடம் இந்தப்பக்கம் எங்கே சென்று வருகின்றீர்கள்? என கேட்டதற்கு, மசாஜ் சென்டருக்கு சென்று விட்டு வருவதாக நாகராஜ் தெரிவித்துள்ளார்.

உடனே இருவரும் பொய் சொல்கிறீர்கள் பெண்களிடம் சென்று உல்லாசமாக இருந்து விட்டு வருகிறீர்கள் என்றும், இதனை உங்கள் குடும்பத்தாரிடம் சொல்லாமல் இருக்க எங்களுக்கு பணம் தரவேண்டும் என மிரட்டி உள்ளனர். நாகராஜ் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியவுடன் அவரை மிரட்டி கூகுள் பே மூலம் 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் உறவினர்களுடன் சென்று நாகராஜ் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பழைய குற்றவாளிகளான மெரினாவில் பலூன் வியாபாரம் செய்யும் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த ஹசன் அலி(30), பஜ்ஜி வியாபாரம் செய்யும் ராஜீவ் காந்தி (40) ஆகியோர், நாகராஜிடம் போலீஸ் போல் நடித்து மிரட்டி பணம் பறித்து சென்றது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். ஹசன்அலி சில ஆண்டுகளுக்கு முன்பு எழும்பூரில் உள்ள மசாஜ் சென்டரில் வேலை செய்து வந்ததும், அங்கு வரும் முதியோர்களிடம் ஆசை வார்த்தை கூறி பெண்களை வைத்து ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் மசாஜ் சென்டர் வேலையை விட்டு, பெயரளவில் பலூன் கடை நடத்தி கொண்டு கூட்டாளி ராஜீவ்காந்தியுடன் சேர்ந்து கொண்டு பகல் நேரத்தில் மசாஜ் சென்டர்களை நோட்டமிட்டு அங்கிருந்து வரும் முதியவர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மசாஜ் சென்டருக்கு சென்று வருவது குடும்பத்தினருக்கு தெரிந்து விட்டால் அவமானம் என நினைத்து யாரும் புகார் கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மசாஜ் சென்டருக்கு சென்று வரும் முதியவர்களை குறிவைத்து தொடர்ச்சியாக பணம் பறித்து வந்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 17,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரையும் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஹசன் அலி மீது ஏற்கனவே பாண்டி பஜார் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 35 துண்டுகளான லிவிங் டூகெதர் காதலி; அமெரிக்கன் க்ரைம் தொடர் போல் திட்டம் தீட்டிய காதலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.