ETV Bharat / crime

சுகாதார ஆய்வாளரின் குடிபோதையினால் 2 பேர் உயிரிழப்பு

மதுபோதையில் சுகாதார ஆய்வாளர் கார் ஓட்டிச்சென்று, சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jun 21, 2021, 7:26 PM IST

திண்டுக்கல்லில் சாலை விபத்து
திண்டுக்கல்லில் சாலை விபத்து

திண்டுக்கல்: வேடசந்தூர் - வடமதுரை சாலையிலுள்ள தண்ணீர் பந்தம்பட்டி பகுதியில் நேற்று (ஜுன். 20) இரவு பணி முடித்து சந்திரசேகர், பழனிச்சாமி ஆகியோர் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, வடமதுரையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றும் பாலகுமார் என்பவர் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்துள்ளார்.

தொடர்ந்து, பாலகுமாரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த பழனிச்சாமி, சந்திரசேகர் ஆகியோர் மீது மோதியது. இதனால் இருவரும் சாலையில் தூக்கி எறியப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கார் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த செங்கல், மணல் மீது மோதி தலைகுப்புற விழுந்தது.

பரிதாபகரமாக உயிரிழப்பு

இதைக்கண்ட இப்பகுதி பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சந்திரசேகர், பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர் பாலகுமார் ஆகியோரைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளையும் எடுத்தனர். ஆனால் அதிவேகமாக கார் மோதியதால் சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி உயிரிழந்தார்.

பொதுமக்கள் உதவியுடன் சந்திரசேகர் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மது அருந்தி கார் ஓட்டிச் சென்ற சுகாதாரப் பணியாளர் பாலகுமார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நிலப்பிரச்சினை காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.