ETV Bharat / crime

குண்டர்களை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி - காவல் துறையிடம் புகார்

அம்பத்தூரில் சூப்பர் மார்க்கெட் முதலாளியை குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக பாஜக நிர்வாகி மீது காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக குண்டர்கள் ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி : காவல்துறையிடம் புகார்

author img

By

Published : Apr 16, 2022, 3:19 PM IST

சென்னை - திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி(70). இவர் கொரட்டூரில் சீனிவாச சூப்பர் மார்க்கெட் எனும் கடை நடத்தி வருகிறார். இவர் 2018ஆம் ஆண்டு முதல் சூப்பர் மார்க்கெட் எதிரே உள்ள கந்தசாமியின் இடத்தில் பாஜக பிரமுகர் ஜெகதீஷ் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் டீக்கடையை காலி செய்யும்படி கந்தசாமி ஜெகதீஷிடம் கூறியுள்ளார். அதற்கு ஜெகதீஷ் மூன்று மாதம் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாக குண்டர்கள் ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி : காவல்துறையிடம் புகார்

இது சம்பந்தமாக கடந்த வாரம் கந்தசாமி மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜெகதீஷ், சூப்பர் மார்க்கெட் நடத்தும் கந்தசாமியைத் தாக்கியுள்ளார். இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கொலை முயற்சி: இந்நிலையில் ஏப்.14 இரவு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் வாடிக்கையாளர் போல வந்து பொருட்கள் வாங்குவதுபோல, கந்தசாமியின் மனைவியிடம் பொருட்கள் வேண்டும் எனக் கேட்கிறார். அதனை அவரது மனைவி எடுக்கச்செல்லும்போது, அந்த அடையாளம் தெரியாத நபர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் கந்தசாமியை சரமாரியாக தலையில் தாக்குகிறார்.

இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கந்தசாமி கீழே விழுகிறார். பின்னர் அங்கிருந்து அந்த அடையாளம் தெரியாத நபர் தப்பி ஓடிவிடுகிறார். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி-யில் பதிவாகி, அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகி ஜெகதீசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பலத்த காயத்துடன் கந்தசாமி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார். பாஜக பிரமுகர் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை குண்டர்களை ஏவித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு - சிசிடிவியில் சிக்கிய இருவர் யார்? போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.