ETV Bharat / crime

இரிடியம் மோசடியில் நடிகர் விக்னேஷ் சிக்கியது எப்படி? - நடிகர் விக்னேஷ்

இரிடியம் மோசடியில் 1.80 கோடி ரூபாய் இழந்த துணை நடிகர் விக்னேஷ் எப்படி மோசடி வலைக்குள் சிக்கினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இரிடியம் மோசடியில் நடிகர் விக்னேஷ் சிக்கியது எப்படி

author img

By

Published : Mar 23, 2022, 6:31 AM IST

சென்னை: கிழக்கு சீமையிலே, பசும்பொன், ராமன் அப்துல்லா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த பிப்ரவரி மாதம், ராம் பிரபு என்ற ராஜேந்திரன் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாரால் இரிடியம் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த இரிடியம் மோசடியில் தானும் தன் நண்பர்களும் சுமார் 1.81 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து ஏமாந்து உள்ளோம். சினிமாவில் மட்டுமல்லாது பிரபலமான பியூட்டி பார்லர் ஒன்றை ஈக்காடுதாங்கலில் நடத்தி வந்தேன். கடந்த 2017ஆம் ஆண்டு ராம் பிரபு என்ற ராஜேந்திரனின் தொடர்பு எனக்கு கிடைத்தது. சினிமா துறையில் இருந்து கொண்டு சம்பாதிக்கும் நீங்கள், கோடிக்கணக்கில் சம்பாதிக்க வழி சொல்வதாக தெரிவித்து, இரிடியம் குறித்து என்னிடம் கூறினார்.

குறிப்பாக, கடந்த 2007ஆம் ஆண்டு வீடு கட்டும் பொழுது தனக்கு 450 வருட சோழர் கால கோயில் இரிடியம் கிடைத்ததாகவும், ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் என்னிடம் கூறினார். மத்திய அரசின் அனுமதியோடு இந்த இரிடியம் விற்பனை செய்து வருவதாக ராம் பிரபு ஆசை வார்த்தைக் காட்டி மோசடி செய்தார்.

ஆர்பிஐ உதவியுடன் இந்தியாவிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கொண்டுவருவதற்கு 133 பேர் வங்கி கணக்கு பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் முதலீட்டாளர்களை அவர் தேடி வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் என்னை போன்ற பல முக்கிய பிரமுகர்களுக்கு கறி விருந்து வைத்து இருடியம் விற்பனை தொடர்பாக முதலீடு செய்ய வைத்துள்ளார்.

மேலும், இதனை நம்புவதற்காக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மாநாடு ஒன்றை நடத்தி, இது குறித்து அறிவியல் பூர்வமான விளக்கங்கள் தெரிவித்து என்னை நம்ப வைத்தார். அதுவும், குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் உள்ளிட்டோரை காண்பித்து மாநாடு நடத்தி தன்னை நம்ப வைத்தார்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பணம் வசூல் செய்து சுமார் ஒரு கோடியே 81 லட்ச ரூபாய் பணத்தை ராம் பிரபுவிடம் கொடுத்து ஏமாந்துள்ளேன். ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தால் 10 கோடி ரூபாய் பணத்தை தருவதாக கூறி தன்னிடம் பணம் வசூல் செய்தார். அதனடிப்படையில், தான் கொடுத்த பணத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக தெரிவித்து மோசடி செய்தார்.

பணத்தை கொடுத்த பிறகு இரிடியம் விற்பனை தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் சந்திப்பை ஏற்படுத்தி தொடர்ந்து நம்ப வைத்தார். அதுமட்டுமல்லாது மத்திய அரசின் குழு ஒன்று உறுப்பினராக இருப்பதாகவும், அரசின் அனுமதியோடு இரிடியம் விற்பனை செய்து வருவதால் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு மத்திய அரசு வழங்கி இருப்பதாக கூறினார்.

இவ்வாறு, அறிவியல் பூர்வமாகவும் பல முக்கிய பிரமுகர்களை அறிமுகப்படுத்தி மத்திய அரசு அனுமதியுடன் இரிடியம் விற்பனை செய்வதாக தெரிவித்ததால் பணத்தைக் கொடுத்து ஏமாந்து உள்ளோம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னைப் போன்று என் நண்பர்களும் பல லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 3000-க்கும் மேற்பட்டோர் கோடிக்கணக்கான ரூபாயை இழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் தனது நண்பர் தமிம் என்கிற தொழிலதிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராம் பிரபு என்கிற ராஜேந்திரன் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுகவில் உள்ள ராம் பிரபு உறவினர்கள் சிலர், ஊராட்சி தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவில் பல முக்கிய பிரமுகர்களை தெரியும் எனவும் தன்னை ஒரு பாஜக ஆதரவாளராக வெளிக்காட்டிக் கொண்டு மத்திய அரசுடன் நெருக்கமாக இருப்பதாக நம்ப வைத்தார். நெருக்கமாக இருப்பதாக நம்ப வைத்ததால்தான் பணத்தை இழந்து உள்ளேன். இதுபோன்ற மோசடியில் பொதுமக்கள் சிக்கக் கூடாது.

தற்போது பணத்தை கொடுத்தவர்கள் தனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். காவல் துறைக்கு புகார் அளிக்க சென்றபோது ராம் பிரபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனக்கும் தன் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுகின்றனர்.

ஏற்கனவே, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஆஜராகி பல்வேறு வாக்குமூலம் அளித்துள்ளேன். சென்னையில் நடந்த மோசடி தொடர்பாக சென்னை போலீசாரும் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க :அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?- முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.