ETV Bharat / crime

ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தம்: 2 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா: அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இரண்டு கரோனா நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்ட ஆக்ஸிஜன் வால்வு மூடியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Apr 24, 2021, 10:06 PM IST

covid incidents in maharashtra
covid incidents in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இரண்டு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து அவர்கள் உறவினர்கள் கூறுகையில், "அடையாளம் தெரியாத நபர்கள் ஆக்ஸிஜன் செல்லும் வால்வை மூடியதால் உயிரிழந்தனர்" என்றனர்.

இது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டபோது, "இச்சம்பவம் நேற்றிரவு (ஏப்.23) வார்டு எண் 7ல் அரங்கேறியுள்ளது. மருத்துவ ஊழியர்கள் பார்த்த போது ஆக்ஸிஜன் வால்வு மூடப்பட்டிருந்தது. இதனால், ஆக்ஸிஜன் செல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி விரைவில் பிடிபடுவார்கள்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.