அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமாரை ஆதரித்து, அணைக்கட்டு, ஊசூர், ஒடுக்கத்தூர் ஆகிய பகுதிகளில் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உள்ளது. இது மோடிக்கு பொறுக்காததால், தமிழ்நாடு மீது பயங்கர கோபத்தில் உள்ளார். ஜி.எஸ்.டியை உயர்த்தி பல தொழில்களை முடக்கியுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தை ஓபிஎஸும், இபிஎஸும் மோடியிடம் அடகு வைத்துவிட்டார்கள். கொஞ்சம் அசந்தால் விற்றே விடுவார்கள். ஓட்டு கேட்க வரும் அதிமுகவினரிடம் ஜெயலலிதா எப்படி இறந்தார் எனக் கேளுங்கள். நீங்கள் அதிமுகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு போடும் ஓட்டு.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக நீட் தேர்வை ரத்து செய்வோம். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், முதியோர் உதவித்தொகையை முற்றிலும் ஒழித்து விட்டார்கள். எனவே டெல்லியில் உள்ள அமாவாசை மோடி, தமிழகத்தில் உள்ள அமாவாசை எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு அமாவாசைகளை நாம் அகற்றியாக வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'முதலமைச்சரின் தத்துப் பிள்ளை நான்' - கடம்பூர் ராஜு